தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி போய் திரும்பிய தூத்துக்குடி அரசு டாக்டருக்கு கொரோனா டெஸ்ட்.. ஷாக்கில் மருத்துவமனை!

தூத்துக்குடி அரசு டாக்டருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஒரு அரசு டாக்டருக்கு இந்த விஷயம் தெரியாமல் போனது அதிர்ச்சியாக உள்ளது.. டெல்லி மாநாட்டுக்கு போய்விட்டு வந்தவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தாரா என்று தெரியவில்லை.. காயல்பட்டினம் டாக்டரை இன்று சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவருக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

coronavirus: coronavirus test tuticorin gov doctor

டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.. இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக கூறப்படுகிறது.. அதன்படி அவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். மீதமுள்ளவர்களை தானாக வந்து பரிசோதனை செய்து கொள்ளும்படி சுகாதாரத் துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், பலரும் முன்வந்து டெஸ்ட் செய்து கொண்டுள்ளனர்.. ஆனால் ஒருசிலர் இந்த பரிசோதனைக்கு வராமலும் உள்ளனர்.. இதனிடையே மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் யார், யார் என்றும் சுகாதார துறை ஊழியர்கள் கண்டறிந்து வருகிறார்கள்.. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டணம் என்ற பகுதியைச் சேர்ந்த அரசு டாக்டர் ஒருவர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்

உடனடியாக அந்த டாக்டரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று அவருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்து அழைத்து சென்றுள்ளனர்.. இவருக்கு தொற்று இருக்குமா, இல்லையா என்பது தெரியவில்லை.. ஒருவேளை தொற்று இருந்தால் அது சிக்கல்தான்.. டெல்லியில் இருந்து திரும்பி வந்ததில் இருந்து மருத்துவம் பார்த்தாரா? எத்தனை பேருக்கு பார்த்தார் என்று தெரியவில்லை

அதனால் யார் யாருக்கு இவர் சிகிச்சை தந்தார் என்ற லிஸ்ட் எடுக்கப்பட்டு, அவர்களுக்கும் பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக, இவர் ஒரு டாக்டராக இருந்தும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளாமல் இருந்தது அதிர்ச்சியாக உள்ளது. இன்று காலை வரை இவர் ஹாஸ்பிடலில் டியூட்டி பார்த்திருக்கிறார். அதனால் ஆஸ்பத்திரியில் உள்ள இவரது ரூம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.. இவரது டெஸ்ட் ரிசல்ட் வந்தால்தான் எதுவானாலும் உறுதியாக தெரியும்!

English summary
coronavirus: coronavirus test tuticorin gov doctor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X