தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூத்துக்குடியில் உச்சகட்டமான பாதிப்பு.. முழு ஊரடங்கு அறிவிக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலனை?

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருவதால் தூத்துக்குடியில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 577 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக சோதனையில் உறுதி செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் 2 பேர் மட்டுமே நேற்று சேர்க்கப்பட்டனர்.

எதை பத்தியும் கவலையே இல்லை.. சரக்குடன் பார்ட்டி.. திருவள்ளூர் திமுக தந்த ஷாக்... 50 பேருக்கு தொற்றுஎதை பத்தியும் கவலையே இல்லை.. சரக்குடன் பார்ட்டி.. திருவள்ளூர் திமுக தந்த ஷாக்... 50 பேருக்கு தொற்று

நிறைய பேருக்கு கொரோனா

நிறைய பேருக்கு கொரோனா

இன்றைய பட்டியலில் ஏராளமானோர் சேர்க்கப்பட உள்ளது. இதனிடையே இன்று ஒரு நாளில்மட்டும் தூத்துக்குடியில் சுமார் 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தூத்துக்குடியில் 367 பேர் குணம் அடைந்துவிட்டனர். 207 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தூத்துக்குடியில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மக்கள்

சென்னை மக்கள்

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொரோன தொற்று பரவியுள்ளது. சென்னையில் இருந்து வருவோர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்போருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

கடுமையான கட்டுப்பாடு

கடுமையான கட்டுப்பாடு

எனினும் தூத்துக்குடியில் பழக்கடை வைத்துள்ளவர், மின்சாதன கடை வைத்துள்ளவர் உள்பட கடை வைத்துள்ள சிலருக்கும் கொரோனா தாக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதன் மூலம் பலருக்கும் பரவி இருக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. கொரோனா பரவும் வேகம் அதிகமாக இருப்பதால் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

தூத்துக்குடியில் ஊரடங்கு?

தூத்துக்குடியில் ஊரடங்கு?

கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனவே, ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்துவிட்டு, கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இன்னும் சில நாளில் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். நாளை மறுநாள் (ஜூலை 24) தமிழக முதல்வர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பிறகு அறிவிப்புக்கு வாய்ப்பு உள்ளது.

English summary
Thoothukudi may expect lockdown with in a week because covid 19 out of control in the city
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X