தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி கயத்தாறு ஒன்றியத்தை கைப்பற்றிய அமமுக.. அதிமுக பரிதாப தோல்வி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அதிர வைக்கும் வகையில் தூத்துக்குடி கயத்தாறு ஒன்றியத்தை தினகரனின் அமமுக கைப்பற்றியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்றது. மாவட்ட கவுன்சில்களில் திமுக 14; அதிமுக 13 இடங்களை கைப்பற்றுகிறது.

Dinakarans AMMK captures Kayatharu Union

ஒன்றிய கவுன்சில்களிலும் இரு கட்சிகளிலும் சரிசமமாக உள்ளன. பொதுவாக மேற்கு மண்டலங்கள் அதிமுகவுக்கு கை கொடுத்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள் திமுகவுக்கு வெற்றியை தந்துள்ளன.

இந்த இரு பிரதான கட்சிகளையும் அதிர வைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தை அமமுக கைப்பற்றியுள்ளது.

சர்வாதிகாரியாக மாறுவேன்.. ஸ்டாலினின் அந்த ஆக்ரோஷமான பேச்சு.. திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம்!சர்வாதிகாரியாக மாறுவேன்.. ஸ்டாலினின் அந்த ஆக்ரோஷமான பேச்சு.. திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம்!

கயத்தாறு ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகளில், அமமுக 10 கவுன்சிலர்களையும் திமுக 4 கவுன்சிலர்களையும் பெற்றுள்ளது. இங்கு அதிமுகவுக்கு 1 கவுன்சிலர் மட்டும்தான் கிடைத்துள்ளது. கயத்தாறு ஒன்றியத்தில் சுயேட்சை ஒருவர் வென்றுள்ளார்.

இதனால் இந்த ஒன்றியம் அமமுக வசமானது. வரும் 11--ந் தேதி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

English summary
In Tamilnadu Local Body Elections, TTV Dinakaran's AMMK captured the Kayatharu Union.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X