தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்ஸிஜன் முழுவதும் தமிழகத்திற்கே!.. ஆட்சியர்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கும் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கே என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்… லாரி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது விநியோகமும் தொடங்கியுள்ளது. இந்த பணியை ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஆக்ஸிஜன் நிரப்பிய முதல் கன்டெய்னர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட்டில் இருந்து புறப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது... முதற்கட்டமாக 34 மெட்ரிக் டன் உற்பத்தி..! ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது... முதற்கட்டமாக 34 மெட்ரிக் டன் உற்பத்தி..!

    ஸ்டெர்லைட்

    ஸ்டெர்லைட்

    அப்போது அவர் பேசுகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது. 4.820 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    10 மெட்ரிக் டன்

    10 மெட்ரிக் டன்

    முதல்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். சில நாட்களில் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தும் தமிழகத்திற்கே விநியோகம் செய்யப்பட்டும் என செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலை

    ஸ்டெர்லைட் ஆலை

    முன்னதாக ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திரக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அப்போது அந்த நிறுவனத்தை திறக்க கூடாது என முந்தைய அதிமுக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

    நிபுணத்துவம்

    நிபுணத்துவம்

    இதையடுத்து தமிழக அரசே நிபுணத்துவம் வாய்ந்த ஆட்களை வைத்து ஆக்ஸிஜன் தயாரிப்பதாக தமிழக அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் பகிர்ந்தளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் இந்த ஆக்ஸிஜன் தமிழகத்திற்கே என ஆட்சியர் கூறியுள்ளார்.

    English summary
    District Collector says that Oxygen manufactured in Sterlite for Tamilnadu only.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X