தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக - அமமுக கூட்டு சேர்ந்துள்ளது.. அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.. முதல்வர் பழனிச்சாமி சவால்!

திமுக-அமமுக கூட்டு வைத்து செயல்படுவது, தங்கதமிழ்ச்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    AIADMK Vs AMMK: அதிமுக-வுக்குள் அதிகரிக்கும் பூசல்கள்.. வேகமாக கரையும் கட்சி!- வீடியோ

    தூத்துக்குடி: திமுக-அமமுக கூட்டு வைத்து செயல்படுவது, தங்கதமிழ்ச்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

    தமிழக சட்டசபை இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.மொத்தம் 18 தொகுதிகளுக்கு தமிழக சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது. இன்னும் 4 தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

    DMK and AMMK joined together against AIADMK says TN CM

    இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியை, திமுகவுடன் சேர்ந்து கவிழ்ப்போம் என்று அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

    திமுக-அமமுக கூட்டு வைத்து செயல்படுவது, தங்கதமிழ்ச்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க இரண்டு பேரும் சேர்ந்தது திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் எங்கள் ஆட்சியை கவிழ்க்க முடியாது. அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

    முதுகுவலியால் அவதிப்படும் ஓ.பி.எஸ்... பிரச்சார களைப்புக்கு காரணம் இது தான்!முதுகுவலியால் அவதிப்படும் ஓ.பி.எஸ்... பிரச்சார களைப்புக்கு காரணம் இது தான்!

    தேர்தலுக்கு பின்பும் அதிமுக ஆட்சிதான் தொடரும். ஸ்டாலினின் கனவு எப்போதும் பலிக்காது. 22 தொகுதி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெற போகிறது. நாங்க மைனாரிட்டி ஆட்சி நடத்தவில்லை.

    எனது தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை ஆட்சி. திமுகதான் மைனாரிட்டி ஆட்சி நடத்தியது. திண்ணை பிரச்சாரம் மூலம் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்

    டெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் பறிக்கவில்லை. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. டெல்லியில் தமிழர்கள் திறமையின் மூலம் மட்டுமே வாய்ப்புகளை பெறுகிறார்கள்.

    தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது இது பெரிய அளவில் வெற்றிபெற்றது. தமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

    இந்த புதிய தொழிற்சாலைகளின் மூலம் தமிழக அரசின் வருவாய் அதிகரிக்கும். அதேபோல் நிறைய பேருக்கு இதனால் வேலை கிடைக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

    English summary
    DMK and AMMK joined together against AIADMK say TN CM in Tuticorin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X