தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓராயிரம் பிரச்சினைகள்.. மோதல்கள்.. ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் திமுக - பாஜக நேரடி போட்டி!

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி

    சென்னை: தூத்துக்குடி தொகுதியில் திமுகவும் பாஜகவும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இரு கட்சிகளை சேர்ந்த இரு முக்கிய பெண் தலைவர்கள் போட்டியிடுவார்கள் என்பதாலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- திமுக கூட்டணி எங்கெங்கு போட்டியிடுகின்றன என்ற விவரங்கள் வெளியாகின. இந்த நிலையில் தூத்துக்குடியில் மட்டும் திமுகவை நேரடியாக களம் காண்கிறது பாஜக.

    கடந்த சில மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அது போல் பாஜக தலைவராக எச் ராஜாவும் ஸ்டாலின், கனிமொழி குறித்து விமர்சனம் செய்து வந்தனர்.

    <strong>40 தொகுதிகள் இருக்கு.. வெறும் 8ல் மட்டுமே அதிமுக - திமுக நேரடி மோதல்.. அம்புட்டு பயம்?!</strong>40 தொகுதிகள் இருக்கு.. வெறும் 8ல் மட்டுமே அதிமுக - திமுக நேரடி மோதல்.. அம்புட்டு பயம்?!

    மம்தா கூட்டம்

    மம்தா கூட்டம்

    மோடி சென்னை வந்த போது அவருக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்கவிட்டு பெரும் எதிர்ப்பை கிளப்பினார் ஸ்டாலின். மோடி ஒரு சாடிஸ்ட் என்றார் ஸ்டாலின். மோடியை எப்படியாவது இந்த ஆட்சியை விட்டு துரத்த வேண்டும் என மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.

    முக்கிய தொகுதி

    முக்கிய தொகுதி

    இதையடுத்து தமிழிசையும் ஸ்டாலினுக்கு அவ்வப்போது பதிலடிகளை கொடுத்து வருகிறார். இதனால் இரு கட்சிகளும் எலியும் பூனையுமாக இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் மிகவும் முக்கிய தொகுதியாக கருதப்படுவது தூத்துக்குடியாகும்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    இங்கு ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என பாஜகவுக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் இருக்கும் நிலையில் இரு கட்சிகளைச் சேர்ந்த பாஜகவின் தமிழிசையும், திமுகவின் கனிமொழியும் களம் காண்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    தூத்துக்குடி மக்கள் பாஜக மீது கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் பாஜகவெல்லாம் எங்களுக்கு போட்டியே இல்லை என திமுக தைரியமாக காலரை தூக்கி விட்டு கெத்து காண்பிக்கிறது. மேலும் வெற்றி எங்களுக்குத்தான் இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என திமுக நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    DMK and BJP are going to contest face to face in Tuticorin LS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X