தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாருக்கும் வராத ஐடியா.. அட தனி ரூட்டில் மாஸ் காட்டும் கனிமொழி.. எல்லோரும் இப்படி செய்வார்களா?

தூத்துக்குடி மக்கள் தங்களுக்கு வேண்டிய கேள்விகளை தன்னிடம் கேட்கலாம் என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK MP Kanimozhi: மக்களை கேள்வி கேட்க கூறும் கனிமொழியின் புது ஐடியா- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி மக்கள் தங்களுக்கு வேண்டிய கேள்விகளை தன்னிடம் கேட்கலாம் என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளராக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.

    அவர் இந்த தேர்தலில் மக்களுடன் கலந்துரையாடுவதற்காக புதிய முறை ஒன்றை உருவாக்கி உள்ளார். #AskKanimozhi என்ற ஹேஷ்டேக் மூலம் மக்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கிறார்.

    என்ன முறை

    என்ன முறை

    தூத்துக்குடி மக்கள் தங்களுக்கு வேண்டிய கேள்விகளை தன்னிடம் கேட்கலாம் என்று கனிமொழி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் செய்துள்ள டிவிட்டில் , அனைவருக்கும் வணக்கம். மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் என்னிடம் தொகுதி மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை #AskKanimozhi என்ற ஹேஷ்டேக்கில் கேட்கலாம், என்றுள்ளார்.

    பலவிதமான கேள்விகள்

    பலவிதமான கேள்விகள்

    இதில் கனிமொழியிடம் பலவிதமான கேள்விகள் எழுப்பப்பட்டது . ஸ்டெர்லைட் பிரச்சனை, தூத்துக்குடி தண்ணீர் பிரச்சனை, உப்பளம் பிரச்சனை, தூத்துக்குடி மீனவர்கள் பிரச்சனை, துறைமுகம் தொடர்பான கேள்விகள், தூத்துக்குடி தாதுமணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

    ஸ்டெர்லைட் கேள்வி

    பாஜக தமிழக தலைவர் தமிழிசைக்கு எதிராக பாசிச பாஜக ஒழிக என்று கோஷம் எழுப்பிய சோபியாவும் இதில் கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுகவின் நிலைப்பாடு என்ன? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    என்ன பதில்

    இந்த கேள்விகளுக்கு எல்லாம் கனிமொழி பதில் அளிக்கவும் முடிவு எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டில், உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் நன்றி. முடிந்த வரை அனைத்து கேள்விகளுக்கும் இன்று நான் காணொளி மூலமாக பதிலளிக்கிறேன் , என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    முதல்முறை ஒருவர்

    முதல்முறை ஒருவர்

    இந்தியாவில் முதல்முறை ஒரு வேட்பாளர் இந்த தேர்தலில் இப்படி கேள்வி கேட்கும் முறையை தைரியமாக தொடங்கி வைத்து உள்ளார். ஹேஷ்டேக் என்ற தொழில்நுட்பத்தை மிக சிறப்பாக பயன்படுத்தி புதிய பாதையை கனிமொழி உருவாக்கி இருக்கிறார். இதையே மற்ற வேட்பாளர்களும் செய்தால் மிக சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK MP Kanimozhi creates #AskKanimozhi hashtag to answer Tuticorin people questions in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X