தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக கூட்டணி சிதறும்.. அங்குள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வருவது நிச்சயம்.. கடம்பூர் ராஜூ பேட்டி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: திமுக கூட்டணியில் இப்போது இடம் பெற்றுள்ள பல கட்சிகள் விரைவில் அதிமுக அணிக்கு வரும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

DMKs alliance partys will soon join the AIADMK : Minister Kadampur Raju

தூத்துக்குடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை தருகிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரூ.23 கோடி மதிப்பிலான புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். டெல்லியில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார சி.டி.யை வெளியிடும்போது, தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சி.டி.யை வெளிடுவார்.

கூட்டணியை பொறுத்தவரை. திமுக கூட்டணி விரைவில் உடைந்துவிடும். அங்கு கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை. கூட்டணி தர்மத்தை மதித்து கடைபிடிக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே. அதனால் தான் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை அ.தி.மு.க. வழங்கி உள்ளது. திமுக. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அதிமுக. கூட்டணிக்கு வர தயாராக உள்ளன. அது நிச்சயமாக நடக்கும்.

விவசாயிகளை, விவசாயத்தைக் கொல்லும் விவசாயியாக நடிப்பவரின் ஆட்சி- எடப்பாடியார் மீது ஸ்டாலின் அட்டாக் விவசாயிகளை, விவசாயத்தைக் கொல்லும் விவசாயியாக நடிப்பவரின் ஆட்சி- எடப்பாடியார் மீது ஸ்டாலின் அட்டாக்

முன்பு அதிமுகவுடன் பிற கட்சிகள் கூட்டணி அமைக்கும்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாதான் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டனர். அதே போன்றுதான் தற்போதும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டு உள்ளார். தமிழகத்தில் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது" இவ்வாறு கூறினார்.

English summary
Minister Kadampur Raju said that Minister Kadampur Raju. Edappadi Palanisamy has been nominated as the AIADMK's chief ministerial candidate. In Tamil Nadu, the AIADMK is leading the alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X