தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர் ஸ்டார்கள் மோதும் தூத்துக்குடி.. கொடி நாட்ட துடிக்கும் பேரரசு கவுதமன்.. கலவரத்தில் கட்சிகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக தொகுதி பட்டியல்... திமுகவுடன் எங்கு நேருக்கு நேர் மோதல் ? முழு தகவல்

    சென்னை: எப்படியும் கவுதமன் தோற்கதான் போகிறார்.. ஆனால் அதிலயும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு!

    இயக்குனர் கவுதமன் ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட் என மக்களையும் மண்ணையும் பாதிக்கும் பிரச்சனைகளை கையில் எடுத்தவர்.

    நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் பூட்டு போட்டு போராட்டம் நடத்தி சென்னையை ஸ்தம்பிக்க வைத்தவர். பிறகு கட்சி (தமிழ் பேரரசு கட்சி) ஆரம்பித்ததுடன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    தனி மவுசு

    தனி மவுசு

    தூத்துக்குடி ஒரு ஸ்டார் தொகுதி. கனிமொழி, தமிழிசை போன்ற வலுவுள்ளவர்கள் வேட்பாளராக போட்டியிட்டாலும், கவுதமனுக்கு என்று ஒரு மவுசு அந்த தொகுதியில் உள்ளதாம்.

    உணர்வுகள்

    உணர்வுகள்

    இவருக்கும் இந்த தொகுதிக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் இதற்கு ஒரே ஒரு காரணம், ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது தூத்துக்குடி மக்கள் பக்கம் நின்றதுடன், மக்களின் உணர்வுகளிலும் முழுதாக பங்கெடுத்தவர் என்பதால்தான்!

    நன்றி மறக்காத மக்கள்

    நன்றி மறக்காத மக்கள்

    மாவட்ட மக்கள் இந்த விஷயத்தில் கவுதமனை இன்னமும் மறக்கவில்லை. இதைதவிர, தமிழ் சமூக ஆதரவு இயக்கங்கள் கவுதமனுக்கு ஆதரவாக இருக்கின்றன என கூறப்படுகிறது. இதனால் வரும் தேர்தலில் இவர் பெறும் ஓட்டுக்கள் எந்த கட்சிக்கு சாதகம், பாதகம் என்பதுதான் விஷயமே. எப்படியோ கவுதமன் வாக்குகளை ஓரளவு சிதறடிப்பார் என்பதுதான் தற்போதைய கணிப்பு.

    சிதறடிப்பார்

    சிதறடிப்பார்

    பாஜகவுக்கு எதிராக களமிறங்க போவதாக கவுதமன் சொன்னாலும், அவரால் பிரியும் வாக்குகள் கனிமொழிக்கு சாதகமாகலாம், அல்லது அமமுகவுக்கும் சாதகமாக போகலாம். அதனால் கவுதமனை லேசில் எடைபோட்டுவிட முடியாது என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்து!

    English summary
    Director Goudaman contest in Thoothukudi Constitution agains BJP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X