தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடர் மழை.. வெள்ளக்காடான தூத்துக்குடி.. சாலை, வீடுகளில் சர்ரென வரும் வெள்ளம்.. பகீர் வீடியோ

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    தூத்துக்குடி: அலறவிடும் இடி மின்னலுடன் கனமழை...! மிதக்கும் தூத்துக்குடி பகீர் வீடியோ..!

    வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை கொட்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி நேற்று முதல் அதி கனமழை தூத்துக்குடியில் கொட்டி வருகிறது.

    இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகள் முன்பும் ஏரி போல் பரந்து விரிந்து தண்ணீர் காணப்படுகிறது. மேடு எது பள்ளம் எது என தெரியாத அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

    அடுத்த 12 மணி நேரம் கவனம்.. அதி தீவிர கனமழை பெய்யும்.. தூத்துக்குடிக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட்!அடுத்த 12 மணி நேரம் கவனம்.. அதி தீவிர கனமழை பெய்யும்.. தூத்துக்குடிக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட்!

    கொரோனா

    கொரோனா

    வீட்டை விட்டு வேலைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். ஏற்கெனவே கொரோனாவால் முடங்கிய வாழ்வாதாரம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் மழை வந்து கெடுத்துவிடுகிறதே என வேதனை தெரிவித்தார்கள்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    தூத்துக்குடி மழை தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மழையின் சப்தம் ஏதோ மிஷின் ஓடுவது போல் உள்ளது. இதிலிருந்து மழையின் அளவை புரிந்து கொள்ளலாம். அது போல் ஒரு கடையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் பார்ப்பதற்கு தார் சாலை போல் உள்ளது. அதிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

    வெள்ள நீர்

    வெள்ள நீர்

    வீடுகளைச் சுற்றியும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் இயங்காமல் பாதியிலேயே நிற்கும் நிலை ஏற்படுகிறது. அதிலும் ஆட்டோ, கார், வேன், சரக்கு வாகனம் ஆகியவை நடுவழியில் நின்றுவிட்டால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கெனவே கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளை சுற்றியிருப்போர் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

    நாசம்

    நாசம்

    வீடுகளில் தண்ணீர் மெல்ல நுழையும் காட்சி அடங்கிய வீடியோவும் வைரலாகி வருகிறது. கீழ்தளத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுவதால் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்துவிட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். என்னதான் உயரத்தில் ஒரு சில பொருட்களை வைத்தாலும், பிரிட்ஜ், சோஃபா, கட்டில் ஆகியவை நாசமடைவதாக தெரிவித்தனர்.

    English summary
    Heavy rain in Tuticorin. Rain water surrounded in residential areas. People gets panic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X