தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் இந்திய சரக்கு கப்பலில் தஞ்சமடைந்தது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாலத்தீவில் கருங்கல் இறக்கிவிட்டு இந்திய சரக்கு கப்பல் நாடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென படகில் வந்த நபர் ஒருவர் சரக்கு கப்பலை நடுக்கடலில் வழிமறித்திருக்கிறார்.

How Maldives Ex VP board in Indian ship?

படகில் இருந்தபடியே தம்மை காப்பாற்றி அழைத்து செல்லுங்கள் என கூச்சலிட்டிருக்கிறார். இதனால் சரக்கு கப்பலில் இருந்தவர்கள் படகில் இருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தாம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் என்றும் இந்த நாட்டில் இருந்தால் என்னை கொலை செய்துவிடுவார்கள் என அச்சப்படுகிறேன் என கதறி இருக்கிறார். முன்னாள் துணை அதிபர் என கூறியதால் செய்வதறியாது அவரை கப்பலில் அழைத்துக் கொண்டு இந்தியா நோக்கி பயணப்பட்டனர்.

மீண்டும் மாலத்தீவு சென்றால் சட்ட சிக்கல்கள் வரலாம் என்பதால் இந்தியா நோக்கி வந்தனர். தூத்துக்குடி துறைமுகத்தை அடைவதற்கு முன்னதாக சரக்கு கப்பலில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தமது நிறுவன உரிமையாளருக்கு இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கடலோர காவல் படை மற்றும் உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு முன்னதாக கப்பலில் ஏறி சோதனை நடத்தி அகமது அதிப்பை கைது செய்திருக்கின்றனர்.

English summary
Here are the deatails of Maldvied Ex VP boared in the Indian Ship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X