தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர்.. விளக்கமளிக்க உள்துறை செயலாளருக்கு.. மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை அளிக்கத் தமிழக உள்துறை செயலாளருக்குத் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்த துரைமுருகன் மீது 7 கொலை வழக்குகள் உட்பட 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

தூத்துக்குடியில் என்கவுண்டர்.. 18 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி சுட்டுக்கொலை.. என்ன நடந்தது? தூத்துக்குடியில் என்கவுண்டர்.. 18 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி சுட்டுக்கொலை.. என்ன நடந்தது?

தூத்துக்குடி என்கவுண்டர்

தூத்துக்குடி என்கவுண்டர்

இந்நிலையில், கடந்த 15ம் தேதி பிற்பகலில் முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் பதுங்கியிருந்த துரைமுருகனை போலீசார் வளைத்துள்ளனர். அப்போது துரைமுருகன் போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றுள்ளார். காவல் ஆய்வாளர் தாக்கிவிட்டு, துரைமுருகன் தப்பி ஓட முயன்றுள்ளார். இதன் காரணமாகத் தற்காப்புக்காக சப் இன்ஸ்பெக்டர் துரைமுருகனை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதில் கழுத்து, தலை உட்பட 3 இடங்களில் குண்டு பாய்ந்து துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநெல்வேலியில் ஜெகதீசன் என்ற பூ வியாபாரியைக் கொலை செய்த வழக்கில் துரைமுருகன் தேடப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நெல்லை அருகே ஜெகதீசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்குகள் துரைமுருகன் மீது நிலுவையில் இருந்த நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

மனித உரிமை ஆணையம்

மனித உரிமை ஆணையம்

இந்த என்கவுண்டர் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த மனித உரிமை அமைப்புகள், இதுசம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இது சம்பந்தமாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்த என்கவுண்டர்

அடுத்தடுத்த என்கவுண்டர்

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வட மாநில கொள்ளையர் ஒருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். வெறும் சி நாட்கள் இடைவெளியில் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து இரு வேறு என்கவுண்டரில் ரவுடிகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tamilnadu Human Rights Commission latest news. Tamilnadu Human Rights Commission on Thoothukudi rowdy encounter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X