தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாலத்தீவில் இருந்து 508 தமிழர்கள் உட்பட 700 பேருடன் தூத்துக்குடி வந்தடைந்தது ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: மாலத்தீவில் தத்தளித்த 508 தமிழர்கள் உட்பட 700 இந்தியர்களை அழைத்துக் கொண்டு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் இன்று காலை தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் கொரோனா லாக்டவுனால் வெளிநாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். விமானங்கள், கப்பல்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

INS Jalashwa arrives in Tuticorin port with 700 Indians from Maldives

இதன் ஒரு பகுதியாக ஆபரேசன் சேது என்ற பெயரில் பிற நாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்கள் ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் இலங்கையில் இருந்து 700 பேரை மீட்டு தூத்துக்குடி வந்தடைந்தது ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல்.

நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்.. ஆனால் சில கண்டிஷன்.. தமிழக அரசின் அதிரடி உத்தரவு!நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்.. ஆனால் சில கண்டிஷன்.. தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

இந்த நிலையில் ஜூன் 5-ந் தேதியன்று மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களுடன் ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் புறப்பட்டது. இந்த கப்பல் இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. 508 தமிழர்கள் உட்பட 700 இந்தியர்கள், தூத்துக்குடிக்கு வருகை தந்தனர்.

508 தமிழர்கள் தவிர்த்து பிற 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் மாலத்தீவில் இருந்து அழைத்துவரப்பட்டனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

English summary
INS Jalashwa arrived in Tuticorin port with 700 Indian nationals from Maldives on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X