தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கயத்தாறு செக்போஸ்ட்டில் காரை நிறுத்தாத ஸ்ரீதர்.. விரட்டி பிடித்த சிபிசிஐடி போலீஸ்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : கயத்தாறு செக்போஸ்ட்டில் காரை நிறுத்தாமல் சென்ற சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீஸார் சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்.

Recommended Video

    தந்தை மகன் சித்ரவதை கொலையில் தொடர்புடைய போலீஸார்கள் அடுத்தடுத்து கைது

    சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகியோர் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

    கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவு முதல் போலீஸார் கைது வரை உயர்நீதிமன்ற கிளை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பிறப்பித்துள்ளது.

    தூத்துக்குடி; அன்று திருச்செந்தூர் அதிகாரி... இன்று சாத்தான்குளம் தந்தை, மகன்... நீதி கேட்கும் திமுகதூத்துக்குடி; அன்று திருச்செந்தூர் அதிகாரி... இன்று சாத்தான்குளம் தந்தை, மகன்... நீதி கேட்கும் திமுக

    விசாரணை

    விசாரணை

    சிபிசிஐடி நேற்று விசாரணை தொடங்கிய நிலையில் சம்பவம் தொடர்பாக துருவி துருவி விசாரணை நடத்தினர். இதனால் நிச்சயம் போலீஸார் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி எஸ்ஐ ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரும் கங்கைகொண்டான் சென்ற இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டனர்.

    நெல்லை

    நெல்லை

    இந்த வழக்கில் இவர்கள் 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் எப்படி பிடித்தார்கள் என்பதை பார்ப்போம். பாலகிருஷ்ணனும், முருகனும் நெல்லையில் மறைந்திருந்தனர். இதையடுத்து அவர்களை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அது போல் முத்துராஜ் சொந்த ஊரான விளாத்திகுளத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்

    நாகர்கோவில்

    அது போல் இவர்கள் கைதானதும் தாமும் கைது செய்யப்படுவோம் என அஞ்சிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கயத்தாறு வழியாக தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28-ஆம் தேதி முதல் ஊர் ஊராக சுற்றி வருவது தெரியவந்தது. கடந்த 28-ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்த அவர் 29 ஆம் தேதி நாகர்கோவில் சென்றுள்ளார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    அங்கிருந்து 30-ஆம் தேதி விருதுநகரில் இருந்த அவரை விசாரணைக்கு அழைத்த போது வர மறுத்துவிட்டு காரில் நெல்லை நோக்கி தப்பி செல்ல முயன்றார். அப்போது கயத்தாறு சோதனை சாவடியில் வாகன சோதனையின்போது ஸ்ரீதர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கங்கைகொண்டானில் அவரை சிபிசிஐடி மடக்கி பிடித்தனர். குற்றவாளிகள்தான் பொதுவாக ஊர் ஊராக பதுங்குவர். ஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர் தப்பியோடி அவரை சேஸிங் செய்துபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Inspector Sridhar chased by CBCID police after he didnt stop his car in Kayathar Check post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X