தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ரெடியாகுது.. மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குனர் மூக்கையா பேட்டி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இஸ்ரோ மகேந்திரகிரி விண்வெளி ஏவுதள வளாகத்தில் 'ககண்யான் திட்டம்' எனப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்க்காக இயந்திர வடிவமைப்புக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக மகேந்திரகிரி மைய இயக்குனர் டி. மூக்கையா கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "'சந்திரயான் 2' செயற்கைக்கோள் நேற்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த ராக்கெட் செலுத்துவதற்காக எல்.100 மற்றும் சி.25 ஆகிய நிலையிலான இயந்திர வடிவமைப்பில் ஈடுபட்டோம். நிலவுக் அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம்

isro mahendragiri director T Mookiah interview of Human Spaceflight Programme gaganyaan mission

இது இலக்கை விட 6 ஆயிரம் கிலோமீட்டர் அதிக தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் மேலும் பிஎஸ்எல்வி ஜிஎஸ்எல்வி ஆகிய ஏவுகணைகளை செலுத்துவதற்காக மகேந்திரகிரி வளாகத்தில் இருந்து இன்ஜின் வடிவமைப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கிருந்து நான்கு, ஐந்து விண்கலங்கள் அனுப்பட உள்ளது.

மோடி உதவி கேட்டது உண்மை.. டிரம்ப் பொய் சொல்ல மாட்டார்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வெள்ளை மாளிகை மோடி உதவி கேட்டது உண்மை.. டிரம்ப் பொய் சொல்ல மாட்டார்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வெள்ளை மாளிகை

இந்த பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். வரும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட வாய்ப்பு உளளது.

நேற்று அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 2 விண்கலமானது செப்டம்பர் 6ஆம் தேதி இரவு நிலவில் தென்துருவ பகுதியை அடையும். செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 2 மணி 43 நிமிடத்திற்கு நிலவில் இறங்கும். அங்கிருந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல்களை அளிக்கும். மனிதனை விண்வெளிக்கு அனுப்ப கூடிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக இயந்திரம் வடிவமைப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக திட்டங்களையும் மகேந்திரகிரி மையம் மேற்கொண்டு வருகிறது" இவ்வாறு கூறினார்.

English summary
gaganyaan mission is basis of the Indian Human Spaceflight Programme: isro mahendragiri director Mookiah explain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X