தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரக்கமில்லை.. சுவாசிக்க காற்று கேட்டவர்களின் மூச்சையே பறித்து நாள்.. உருக்கமாக டிவிட் செய்த கமல்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து சொந்த மக்களை அரசு சுட்டுக்கொன்ற தினம் இன்று என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் நினைவு நாள் குறித்து டிவிட் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு நடந்த போராட்டத்தில் கடந்த இரண்டு வருடம் முன் துப்பாக்கி சூடு நடைபெற்றது. அமைதியாக நடந்த போராட்டத்தில் திடீர் என்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. நூறாவது நாள் போராட்டத்தில் கடந்த வருடம் இதே நாளில், மக்கள் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி சென்றனர்.

Kamal Haasan remembers Tuticorin shooting in his tweet

அப்போது மக்கள் மீது தூத்துக்குடி போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்திய மக்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

Kamal Haasan remembers Tuticorin shooting in his tweet

தூத்துக்குடியில் இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இது தொடர்பாக தற்போது டிவிட் செய்துள்ளார். அதில், மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று.

தென் பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது- ஸ்டாலின்தென் பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது- ஸ்டாலின்

சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது, என்று உருக்கமாக கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார் .

English summary
Kamal Haasan remembers Tuticorin shooting in his tweet on the second year anniversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X