தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனிமொழியின் சேலையை அன்போடு பிடித்து இழுத்த குழந்தை.. தூத்துக்குடியில் பாச மழை!

கோவில்பட்டி ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியை வலம் வரும் கனிமொழி- வீடியோ

    தூத்துக்குடி: கிட்டத்தட்ட தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட போவது கன்பார்ம் ஆகிவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு நிகழ்விலும் தொகுதி மக்களின் அன்பு பிடியில் திளைத்து வருகிறார் கனிமொழி!

    3 வருடத்திற்கு முன்பேயே தூத்துக்குடி தொகுதி மீது நாட்டம் வைத்துவிட்டார் கனிமொழி. அதனாலேயே கிராமத்தை தத்தெடுத்தது முதல் ஸ்டெர்லைட் போராட்டம் வரை மக்களுடன் கலந்தே இருந்தார்.

    இதனுடன் கிராம சபை கூட்டத்தை இந்த மாவட்டத்தில் நடத்தும் பொறுப்பும் கனிமொழிக்கு திமுக தலைமை தந்துவிடவும் இன்னும் பம்பரமாக சுழன்று மக்களை சந்திக்க ஆரம்பித்தார். அப்போது, "சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டிருக்கும் கனிமொழி உங்களை தேடி வந்திருக்கிறார்' என்றே மாவட்டம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது.

    கனிமொழி பங்கேற்பு

    கனிமொழி பங்கேற்பு

    இந்த நிலையில் கனிமொழி திரும்பவும் ஊராட்சி சபை கூட்டங்களில் பங்கேற்க தூத்துக்குடிக்கு நேற்று வந்தார். இது சம்பந்தமான ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.

    ஊராட்சி சபை

    அதில், "இன்று (22.02.2019) கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இமாம் மணியாச்சி ஊராட்சி, திட்டங்குளம் ஊராட்சி, நல்லாட்டின்புதூர் ஊராட்சி, வில்லிசேரி ஊராட்சி, முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்ற போது..." என்று பதிவிட்டுள்ளார்.

    பெண்கள்

    பெண்கள்

    அத்துடன், ஒரு போட்டோவும் பதிவிட்டுள்ளார். ஊர்ப் பொது இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. முழுக்க பெண்கள் கூட்டம்தான். முக மலர்ச்சியோடு கனிமொழியை அனைவரும் வரவேற்கிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் கனிமொழியை பார்த்ததும் ஆர்வத்துடன் துள்ளி குதிக்கின்றனர்.

    சேலை முந்தானை

    சேலை முந்தானை

    பல குழந்தைகள் கனிமொழியுடன் கைகுலுக்க வேண்டும் என்ற ஆசையில் தங்கள் கைகளை நீட்டுகிறார்கள். கனிமொழியும் அந்த சிறுமிகளுக்கு கையை கொடுத்து கொண்டே உற்சாகப்படுத்துகிறார். அப்போது ஒரு பெண் குழந்தை கனிமொழியின் புடவை முந்தானையை பிடித்து பாசத்துடன் இழுக்கிறது.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    அவர் கருணாநிதி மகள் என்பதோ, இந்த நாட்டின் எம்பி என்பதோ அந்த குழந்தைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கனிமொழியை நேரில் பார்த்த சந்தோஷமும் பாசமும், அவரது சேலையை இழுத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை அந்த குழந்தைக்கு ஏற்படுத்தி விட்டது. ஆக மொத்தம் கனிமொழி, தொகுதியில் உள்ள குழந்தைகளின் மனசையும் வென்றுவிட்டார்.

    காவி நிறம்

    காவி நிறம்

    அதை விடுங்க.. கனிமொழி கூட்டம் நடந்த இடத்திற்கு அருகே ஒரு வீடு இருக்கு பாருங்க.. அதில் தாமரைச் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கு.. காவி நிறம் வேறு. கிராம சபை கூட்டத்தை இந்த இடத்தில் நடத்த திட்டமிட்டது எதேச்சையா அல்லது சிம்பாலிக்காக தாமரைக்கு சவால் விடும் வகையில் இந்த இடத்தை வேண்டும் என்றே தேர்வு செய்தார்களா.. அது சூரியனுக்கே வெளிச்சம்.

    English summary
    Kanimozhi MP met Kovilpatti area peoples in Thoothudi District
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X