தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை.. அச்சுறுத்துவதற்காகவே சோதனை- கனிமொழி விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியில் இருக்கும் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை

    தூத்துக்குடி: தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்த சதி திட்டத்தின் ஒரு பகுதியாகவே என் வீட்டில் சோதனை செய்துள்ளனர் என திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி வீடு எடுத்து தங்கியுள்ளார். அங்கு அவருக்கு அலுவலகமும் உள்ளது. நேற்று இரவு 10 பேர் கொண்ட வருமான வரித் துறையினர் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், 8.30 மணிக்கு வருமான வரித் துறையினர் எனது வீட்டுக்கு வந்தனர். அப்போது சோதனை செய்ய வேண்டும் என கூறினர். ஆதாரம் இருக்கிறதா என கேட்டேன். இந்த நேரத்தில் சோதனை செய்யலாமா என கேட்டேன்.

    வேலூர் தேர்தல் ரத்து.. டாப் டூ தலைவர் துரைமுருகனுக்கு வைத்த குறி.. திமுகவுக்கு விடப்பட்ட சவாலா?வேலூர் தேர்தல் ரத்து.. டாப் டூ தலைவர் துரைமுருகனுக்கு வைத்த குறி.. திமுகவுக்கு விடப்பட்ட சவாலா?

    புறம்பானது

    புறம்பானது

    மேலும் சோதனை நடத்திய இடத்தில் எனக்கு சம்மன் கொடுத்தார்கள். இது சட்டத்துக்கு புறம்பானது. ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு இங்கு எதுவுமே கிடைக்கவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொண்டபின் திரும்பி சென்றுவிட்டனர்.

    தேர்தல்

    தேர்தல்

    வேலூரில் தேர்தலை நியாயமற்ற முறையில் நிறுத்திவிட்டது போல் இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, தோல்வி பயத்தால் இங்கும் தேர்தலை நிறுத்தலாம் என்ற நப்பாசையில் வந்தனர். ஆனால் அவர்களது ஆசை நிராசையாகிவிட்டது.

    வீட்டில்

    வீட்டில்

    இது போன்ற சோதனைகளுக்கெல்லாம் திமுகவினர் அஞ்சமாட்டார்கள். இனிமேல் தான் தொண்டர்கள் உத்வேகமாக செயல்படுவார்கள். எந்தவித அடிப்படையும் இல்லாமல் எங்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளார். தோல்வி பயத்தால் தூத்துக்குடியில் தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறார்கள். திமுக மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்றே பழி போடுகிறார்கள்.

    மோடியுடன்

    மோடியுடன்

    தேனி அதிமுக வேட்பாளர் வீடு, தமிழிசை வீட்டில் ஆகியோர் வீட்டில் கோடி கோடியாக பணம் உள்ளது. அங்கு சோதனை நடத்தாதது ஏன்? தேர்தல் ஆணையமும் மோடியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் எங்கள் தொண்டர்கள் இனிமேல்தான் உற்சாகமாக செயல்படுவார்கள் என கனிமொழி தெரிவித்தார்.

    English summary
    DMK candidate Kanimozhi explains that IT raid in my house is politically motivated one. After 1 hour of raid, officials nothing seized.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X