தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலைஞரின் மகன் அதிக நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும்... ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசை நிரூபிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஓட வேண்டும்..

    தூத்துக்குடி: பாஜகவுடன் பேசியதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதற்கு, கலைஞரின் மகன் அதிக நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

    வருகிற 19 ம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

    தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக, பாஜகவுடன் பேசியது என நான் கூறியது உண்மை தான்; எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    சென்னை வளசரவாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. புகை மண்டலத்தால் மக்கள் பெரும் அவதி!சென்னை வளசரவாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. புகை மண்டலத்தால் மக்கள் பெரும் அவதி!

    விலக தயாரா?

    விலக தயாரா?

    பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும், நிரூபிக்க தவறினால் பிரதமர் நரேந்திரமோடியும், தமிழிசையும் அரசியலில் இருந்து விலக தயாரா? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

    பொய் பேட்டி

    பொய் பேட்டி

    மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் கல்லெறியும் முயற்சி படுதோல்வி அடையும் என்று தமிழிசை சௌந்திரராஜனுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை பொய் பேட்டி அளித்ததற்காக வேதனைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

    தப்புக்கணக்கு

    தப்புக்கணக்கு

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோருடன், தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தப்புக்கணக்கு போட தமிழகத்தில் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால், அது மு.க. ஸ்டாலின் தான் என்று விமர்சனம் செய்தார்.

    உண்மை இல்லாமல் இருக்காது

    உண்மை இல்லாமல் இருக்காது

    நான் சொல்வதில் எப்போதுமே உண்மை இல்லாமல் இருக்காது என்றும், பொய் சொல்லாத, ஊழல் இல்லாதது எனது அரசியல் பாரம்பரியம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார்.அதே சமயம், அரசியலில் எந்த காலக்கட்டத்தில் நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

    English summary
    BJP state president Tamilisai said that Karunanithi's son must be in politics for a long time
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X