தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாய்ல அடிங்க.. இவ என் தாய் மீனாட்சி.. ஞாபகம் இருக்கா... இவங்கெல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா..!

காயல்பட்டினம் நகராட்சி அலுவலக பொறியாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நகராட்சியில் ஒரு நாடக காட்சி

    தூத்துக்குடி: ஆபீசில் வேலை பார்க்காமல், டிக்டாக் வீடியோவில் ஆட்டம் போட்ட காயல்பட்டினம் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னதாக, இப்படியெல்லாம் நடக்க அனுமதித்த, இந்த நகராட்சியின் என்ஜினியரை அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    சொத்து வரி உரிமம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், உட்பட நிறைய விஷயங்களுக்காக நகராட்சி அலுவலகத்துக்கு காயல்பட்டின மக்கள் நடையாய் நடந்து அலைகிறார்கள்.

    ஆனால், அங்கே பொறுப்பாக யாருமே பதில் சொல்வதில்லை என்றும் அதிகாரிகள் அடிக்கடி சீட்டில் இருப்பதில்லை என்றும் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த சமயத்தில்தான் அந்த நகராட்சி ஆபீசில் ஊழியர்கள் வேலை பார்க்காமல் டிக்டாக் செய்த வீடியோக்கள் வெளியாகின.

    முதல்ல மூடு கிரியேட் பண்ணனும்.. பிறகு விடிய விடிய.. இளம் தாயின் பதற வைக்கும் ஸ்மியூல்...!

    தாய் மீனாட்சி

    தாய் மீனாட்சி

    ஒரு பெண் ஊழியர் ஒருவர் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் நின்றிருக்கும் ஆண் ஊழியர், அந்த பெண் ஊழியரிடம் கம்ப்யூட்டரை காட்டி, "தினமும் நல்லா கிளீன் பண்ணுவீங்களோ.." என்று கேட்கிறார். அதற்கு பெண் ஊழியர், "கிளீனிங்னு சொல்லாதீங்க.. வாயில அடிங்க.. வாயில அடிங்க.. தினம் அபிஷேகம் பண்ணுவியாப்பான்னு கேளுங்க. யார் கேட்டாலும் அப்படித்தான் சொல்லுவேன்.. ஏன்னா இவ என் தாய் மீனாட்சி" என்று பதில் சொல்லுகிறார்.

    நகைகள்

    நகைகள்

    இது ஒரு வீடியோ என்றால் மற்றொரு வீடியோவில் 2 ஆண் ஊழியர்கள் நகை நட்டோடு காட்சி தந்து காமெடி செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துதான் காயல்பட்டினம் மக்கள் கொதித்து போய் விட்டார்கள். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையாவது எடுங்கள் என்று கோரிக்கையும் விடுத்தார்கள். இது எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வீடியோக்கள் இணையத்தில் படுவேகமாக வைரலானது.

    விசாரணை

    விசாரணை

    இந்த நகராட்சியின் பொறுப்பு கமிஷனர் பணியிலிருப்பவர் அதன் பொறியாளர் சுரேஷ் என்பவர். பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 30 பேர்களும் இங்கு வேலை பார்க்கின்றனர். ஊழியர்களின் டிக்டாக் வீடியோவை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டிருந்தார்.

    அறிக்கை

    அறிக்கை

    அதன்படியே விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. டிக் டாக் வெளியிட்ட பெண் உட்பட ஏழு பேர், திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இதையடுத்து, சுரேஷை, திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடிக்கு பணியிட மாற்றம் செய்து, நகராட்சிகள் நிர்வாக ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். புளியங்குடி நகராட்சி பொறியாளரான புஷ்பலதா, காயல்பட்டிணம் நகராட்சி புதிய பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இனி வீடியோவில் ஆட்டம் போட்ட மற்ற ஊழியர்களின் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

    English summary
    Kayalpattinam municipality Office Engineer Suresh has transferred to Puliyangudi in Thirunelveli due to workers Tik Tak video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X