தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவில்பட்டியில் காசநோய் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.. விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

Google Oneindia Tamil News

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம் 2வது நாளாக கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது.

 kovilpatti municipality oraganises an awareness programme to avoid tuberculosis

விழாவில், நகராட்சி துப்புரவு அலுவலர் ஸ்டோன்லிகுமார், சாத்தூர் நகராட்சி துப்பரவு அலுவலர் குமார் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து, திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம், கடம்பூர் காசநோய் அலகின் சார்பாக முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் காசநோயில் இருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 kovilpatti municipality oraganises an awareness programme to avoid tuberculosis

துப்பரவு பணியாளர்களுக்கு காசநோய் எவ்வாறு ஏற்படுகிறது என்றும், அதனை தடுக்கும் நடவடிக்கைகள் என்னனென்ன என்றும் நிகழ்ச்சியில் குறும்படம் மூலம் விளக்கி கூறப்பட்டது.

 kovilpatti municipality oraganises an awareness programme to avoid tuberculosis

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய தகவல்களை பெற முடிந்ததாகவும், மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துப்புரவு பணியாளர்கள் கூறினர்.

 kovilpatti municipality oraganises an awareness programme to avoid tuberculosis

பின்னர், நிகழ்ச்சியில் காசநோய் அறிகுறிகள், பரவும் தன்மை, ஆகியவைபற்றி எடுத்துக்கூறினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, காச நோய் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

 kovilpatti municipality oraganises an awareness programme to avoid tuberculosis

பின்னர் காசநோயை தடுப்பது குறித்த உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

English summary
Tuberclossis awareness programme was held in Kovilpatti municipality for labours.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X