தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன

குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா நடைபெறும் நாள்களில் கடற்கரையில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்றவற்றுக்கு அனுமதியில்லை.கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தா்கள், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தசரா விழா நடைபெறும் நாள்களில் கடற்கரையில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்றவற்றுக்கு அனுமதியில்லை.கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா வரும் சனிக்கிழமை அக்டோபர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது..

Kulasai dasara Festival 2020: Restrictions for devotees coming to the temple

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் கொடியிறக்க நிகழ்வுகளில் பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை.

இந்த மூன்று நிகழ்ச்சிகளும் யூடியூப் சேனலிலும், உள்ளுா் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.

தசரா திருவிழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 18ஆம் தேதி முதல் 9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 25ஆம் தேதி வரை பக்தா்கள் ஆன்லைன் மூலத் முன்பதிவு செய்து காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமியை தரிசனம் செய்யலாம்.

அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்.. செயற்கை சுவாசத்தில் சிகிச்சைஅமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்.. செயற்கை சுவாசத்தில் சிகிச்சை

பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோயில் பகுதிக்கு வர அனுமதியில்லை. பக்தா்கள் தங்கள் ஊா்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

பக்தா்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். அனைவரும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் சுகாதாரத் துறை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.

சிறப்பு அன்னதானத்திற்கு அனுமதியில்லை. தரிசனத்திற்கு வரும் பக்தா்கள் பூ, மாலை, தேங்காய் பழ வகைள் கொண்டு வர அனுமதியில்லை.

65 வயதிற்கு மேற்பட்டவா்கள், உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளவா்கள், சுவாசம் தொடா்பான நோய், இருதய நோய் கண்டவா்கள், கா்ப்பிணிகள், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.

விழா நாள்களில் கடற்கரையில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்றவற்றுக்கு அனுமதியில்லை.கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதியில்லை.

English summary
Kulasekaranpattinam Dasara festival 2020: The temple administration has announced the rules to be followed by the devotees and the public during the Mutharamman Temple in Kulasekarapattinam. The temple administration has stated that it is not allowed to stay on the beach or set up shops during the days of Dasara. It is also not allowed to hold art shows on the beach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X