தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilisai Soundararajan : ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என தமிழக மக்கள் உணர்வார்கள்-தமிழிசை-வீடியோ

    தூத்துக்குடி: ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என தமிழக மக்கள் உணர்வார்கள் என நான் நினைக்கிறேன் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

    நாடு முழுவதும் பாஜக பெரும் வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. பாஜக வேட்பாளர்கள் யாருமே தமிழகத்தில் வெற்றி பெறவில்லை.

    இதனால் ஒருபக்கம் வருத்ததில் உள்ள பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன், அகில இந்திய அளவில் வெற்ற வெற்றியை எண்ணி சந்தோசத்தில் இருக்கிறார்.

    அவர் கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம்.. வாய்ப்பு இனி வராது.. தினகரனை நம்பி ஏமாந்த ஸ்டாலின்! அவர் கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம்.. வாய்ப்பு இனி வராது.. தினகரனை நம்பி ஏமாந்த ஸ்டாலின்!

    மக்கள் வாக்களித்தார்கள்

    மக்கள் வாக்களித்தார்கள்

    தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், நாடு முழுவதும் மக்கள் பாஜகவுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள். ஆனால் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என தமிழக மக்கள் உணர்வார்கள் என நான் நினைக்கிறேன்.

    தொங்கு பாராளுமன்றம்

    தொங்கு பாராளுமன்றம்

    நாட்டில் நல்ல திட்டங்கள் நிறைவேற்றும் வகையில் தொங்கு பாராளுமன்றத்துக்கு பதில் தங்கும் பாராளுமன்றம் அமைந்துள்ளது. தொங்குபாராளுமன்றம் அமைந்தால் நிலையற்ற தன்மை காரணமாக நல்ல திட்டங்களை கொண்டுவர முடியாது. அதனால் மக்கள் உணர்ந்து வாக்களித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    திருச்சியை திணறடித்த நாம் தமிழர், மநீம.. கூட சேர்ந்து வெளுத்த அமமுக.. அதிர்ச்சியில் திருச்சியை திணறடித்த நாம் தமிழர், மநீம.. கூட சேர்ந்து வெளுத்த அமமுக.. அதிர்ச்சியில் "பெருசுகள்"

    எதிர்பிரச்சாரங்கள்

    எதிர்பிரச்சாரங்கள்

    தமிழகத்தில் நாங்கள் நினைத்த அளவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் வாக்களித்த மக்களுக்கு நன்றி. ஆனால் வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என உணர்வார்கள். தமிழகத்தில் நல்ல திட்டங்களையும் தவறான திட்டங்களாக முன்னிறுத்தி 3 வருடங்களாக எதிர்பிரச்சாரங்கள் செய்து வந்தார்கள். அதற்கு தமிழக மக்கள் செவி சாய்த்து தங்கள் வாக்குகளை கொடுத்து இருக்கிறார்கள்.

    ஆத்ம பரிசோதனை

    ஆத்ம பரிசோதனை

    எங்களுக்கு தமிழக மக்கள் மேல் கோபமில்லை. நாங்கள் ஊழல் செய்யவில்லை. தமிழக மக்களுக்கு நல்லதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் ஏன் தமிழக மக்களிடம் வாக்குகளை பெற முடியவில்லை என்பது பற்றி ஆத்ம பரிசோதனை செய்யும் நிலையில் இருக்கிறோம்" என்றார்.

    செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

    English summary
    lok sabha election results 2019 live updates: tn bjp leader tamilisai said that tn people will worry why did not vote to bjp
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X