தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊழல் பற்றி தி.மு.க. பேசலாமா?... தமிழிசை சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: வேலூர் சோதனையில் பணம் சிக்கிய நிலையில், ஊழல் பற்றி தி.மு.க. பேசலாமா? என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், காமராஜர் சந்தை பகுதியில் வாக்கு சேகரித்தார்.

காய்கறி சந்தைக்கு அருகே, துப்புரவு பணியாளர்களுடன் பணிபுரிந்து விட்டு, தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்தார் தமிழிசை. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை .. மத்திய சென்னையிலிருந்து நக்கலடித்த அன்புமணி! ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை .. மத்திய சென்னையிலிருந்து நக்கலடித்த அன்புமணி!

ஊழல் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டு

அதன்படி, தூத்துக்குடிக்கு பல திட்டங்களை கொண்டு வந்து மேம்படுத்த உள்ளதாக தெரிவித்தார். வேலூர் சோதனையில் பணம் சிக்கிய நிலையில், ஊழல் பற்றி தி.மு.க. பேசலாமா? எனவும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

மேலும், தனக்கு ஒரு முறை கூட ராஜ்யசபா எம்.பி ஆகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தற்போது தான், தூத்துக்குடி மக்கள் தன்னை பார்லிமென்ட் அனுப்பி வைக்க உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

வாரிசு அடிப்படையில் எம்.பி

வாரிசு அடிப்படையில் எம்.பி

வாரிசு என்ற அடிப்படையில் இரண்டு முறை ராஜ்யசபா எம்.பியாக இருந்து கொண்டிருக்கும் நீங்கள் (கனிமொழி), தமிழ்நாடு பிரச்சினைகளை, தூத்துக்குடி பிரச்சனையை எத்தனை முறை எழுப்பி உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்

கனிமொழி நாடகம்

கனிமொழி நாடகம்

தமிழிசை இரக்கம் இல்லாதவள் என்று பேசுகிறார்கள்; நான் கேட்பதற்கு நீங்கள் (கனிமொழி) பதில் சொல்லுங்கள் என்றும், ஈழத்தில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். அப்போது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்காமல், கட்சி தலைவர் என்ற முறையில் சொந்த அப்பாவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து ஒருநாள்கூட ராஜினாமா செய்யாமல் கனிமொழி நாடகமாடியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

English summary
BJP candidate Tamilisai Said That DMK should not talk about corruption
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X