தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போக்குவரத்துக் காவலருடன் லடாய்... அமைச்சர் உதவியாளர் மீது புகார்... பரஸ்பர சமாதானம்..!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், போக்குவரத்து தலைமை காவலரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் தாக்கிய விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமைச்சர் உதவியாளர் மீது போக்குவரத்து தலைமைக்காவலர் அளித்துள்ள புகார் கடிதமும், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் எழுதியுள்ள சிகிச்சை பின்னணி விவரமும் முகநூல், வாட்ஸ் அப் என உலா வருகிறது.

Minister Anitha radhakrishnan PA who attacked the traffic policeman

இதனிடையே இது தொடர்பாக நம்மிடம் பேசிய போக்குவரத்துக் காவலர் முத்துக்குமார், இரு தரப்பினரும் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் சமாதானமாக சென்றுவிட்டோம் எனக் கூறினார்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் போக்குவரத்து தலைமைக் காவலராக இருப்பவர் முத்துக்குமார். இவர் நேற்றுக்காலை மணி ஐயர் ஹோட்டல் முன்பாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர், தனது காரை அந்த ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்திவிட்டு சாப்பிட சென்றிருக்கிறார்.

இந்நிலையில் காரை எடுக்கச் சொன்ன போக்குவரத்து தலைமை காவலர் முத்துக்குமாரிடம், சிறிது நேரத்தில் புறப்பட்டுவிடுவோம் என ஓட்டுநர் கூறியிருக்கிறார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் காரை எடுக்குமாறு மீண்டும் கூறியிருக்கிறார் காவலர் முத்துக்குமார்.

இந்த உரையாடலை அமைச்சர் உதவியாளரிடம் என்ன சொல்லி பற்ற வைத்தாரோ ஒட்டுநர் தெரியவில்லை, அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி விவகாரம் வில்லங்கமானது. இதையடுத்து போக்குவரத்து தலைமைக்காவலர் இது தொடர்பான புகாரை கோயில் காவல் நிலையத்தில் அளித்தார்.

இந்நிலையில் போக்குவரத்துக் காவலரிடம் அமைச்சரின் உதவியாளர் மன்னிப்புக் கேட்டதுடன் கோபத்தில் இது போல் நடந்துவிட்டதாக சமாதானம் பேசியிருக்கிறார். இந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்ட போக்குவரத்துக் காவலர் முத்துக்குமார், புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே போக்குவரத்துக் காவலர் மீது அமைச்சரின் உதவியாளர் கோபமடைய, அவரது கார் ஓட்டுநர் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. போக்குவரத்துக் காவலர், நீங்கள் யார் என்பதை கூறியும் அப்படி சொன்னார் இப்படி சொன்னார் என அவர் கூறியதன் அடிப்படையிலேயே இந்த லடாய் நிகழ்வு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இந்த நிகழ்வின் போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Anitha radhakrishnan PA who attacked the traffic policeman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X