தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது சரித்திர உண்மையா.. இல்லை கமல் அது தரித்திர உண்மை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் கூறியது சரித்திர உண்மை... சர்ச்சை பேச்சு குறித்து கமல் விளக்கம்

    தூத்துக்குடி: சரித்திர உண்மை என கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் சர்ச்சை விமர்சனத்தை செய்துள்ளார்.

    அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் கமல் கூறிய ஒற்றை கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அதற்கு பதில் அளிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்லபோய் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறி ஏழரையை கூட்டினார்.

    கமலின் 'இந்து தீவிரவாதி' பேச்சை முன்வைத்து 'குளிர்காயும்' பாஜக? கமலின் 'இந்து தீவிரவாதி' பேச்சை முன்வைத்து 'குளிர்காயும்' பாஜக?

    ராஜேந்திர பாலாஜி

    ராஜேந்திர பாலாஜி

    இந்த நிலையில் நேற்று திருப்பரங்குன்றத்தில் பேசிய கமல்ஹாசன் நான் அரவக்குறிச்சியில் பேசியது சரித்திர உண்மை என விளக்கமளித்தார். இதுகுறித்து தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்தார்.

    தீவிரவாதி

    தீவிரவாதி

    அப்போது அவர் கூறுகையில் சரித்திர உண்மை, சரித்திர உண்மை என கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறுவது சரித்திர உண்மையா, அதற்கு முன்பெல்லாம் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் நிறைய உண்டு.

    நல்லிணக்கத்திற்கு கேடு

    நல்லிணக்கத்திற்கு கேடு

    அதற்குள்ளே நாம் போக வேண்டாம். அந்த சம்பவங்கள் கசப்பான, மறைக்கப்பட வேண்டிய மன்னிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். அதை நாம் மீண்டும் பேசினால் மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும்.

    தீவிரவாதி

    தீவிரவாதி

    அந்த சம்பவங்களுக்குள் ஒரு சாதாரண மனிதனே செல்ல கூடாது. அப்படியிருக்கும் போது ஒரு நடிகர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விஸ்வரூபம் படம் வெளிவந்த போது இஸ்லாமியர்களை எப்படி தீவிரவாதிகளாக சித்தரித்து காண்பித்தார் என்பதை மறக்க மாட்டார்கள் என்றார் ராஜேந்திர பாலாஜி.

    English summary
    Minister Rajendra Balaji advises Kamal Haasan that he shoulf not have talked about Historical truth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X