தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''நாங்க சொல்றதை அப்படியே செய்றீங்களே சபாஷ்''... முதல்வரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தேர்தல் சுயநலத்திற்காக விவசாய கடன்களை அ.தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்துள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Recommended Video

    ஜெயலலிதா இறந்ததும் தூதுவந்த அதிமுகவினர்... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஸ்டாலின்!

    7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னர் நிராகரித்ததையும் வெளியே சொல்லாமல் முதல்வர் இருந்துள்ளார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் 2 சாதனைகள் என்னவென்றால் ஊழலும், விலைவாசி உயர்வும் மட்டும்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

    MK Stalin says AIADMK govt lends agricultural loans for election selfishness

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தல் சுயநலத்திற்காக விவசாய கடன்களை இந்த ஆட்சியில் ரத்து செய்துள்ளனர். தி.மு.க சொல்வதை அ.தி.மு.க அப்படியே செய்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் ரத்து செய்வோம் என அறிவித்தோம். அதனை தற்போது அதிமுக அரசு அறிவித்துளளது. தேர்தல் சுயநலத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார்.

    நாங்கள் இதை அப்போதே கோரியும் செய்யாமல், சுயநலத்துக்காக இப்போது செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவோம் என கூறினோம். அதை செய்தார்களா? 7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னர் நிராகரித்ததையும் வெளியே சொல்லாமல் முதல்வர் இருந்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழகம் முன்னிலையில் இருந்தது. ஆனால் இப்போது இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று விட்டது.

    ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கையில் மக்கள் என்னிடம் மனுக்கள் கொடுக்கின்றனர்.அதிமுக ஆட்சியில் 3 சாதனைகள் என்னவென்றால் ஊழலும், விலைவாசி உயர்வும் மட்டும்தான். இந்த ஆட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் புறக்கணிப்பட்டுளள்னர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கடமை தவறி விட்டனர். அணைய போகும் அரசாக அதிமுக அரசு உள்ளது என்று முக ஸ்டாலின் பேசினார்.

    English summary
    AIADMK lends agricultural loans for election selfishness DMK leader MK Stalin said that the regime has been abolished
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X