தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி-வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சந்தீப் நந்தூரி கூறியுள்ளதாவது: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எனவே மக்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறையினருடன் ஆலோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    People should not protest against Sterlite: Tuticorin district collector

    சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் 100 நாட்களை எட்டிய நிலையில், மே 22ம் தேதி பெரும் போராட்டம் வெடித்தது. காவல்துறையினர் சுட்டதில் 13 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், இன்று காலை முதலே தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையை தூண்ட முயல்வோரை இனம் கண்டு காவல்துறைக்கு தகவல் அளிக்கும்படி காவல்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    English summary
    Tuticorin district collector Sandeep Nanduri says people should not protest against Sterlite.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X