தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சினிமாவுல மார்க்கெட் போயாச்சி.. அதான் கமல் அரசியலுக்கு வந்துட்டாரு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

ஒட்டப்பிடாரம்: சினிமாவில் மார்க்கெட் போனதால் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒட்டப்பிடாரத்தில் பேசினார்.

ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மேலும் வாக்குச் சாவடி முகவர்கள், நிர்வாகிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில் விருதுநகர் அல்லம்பட்டியில் காமராஜர் சிலை அருகே மதுக்கடை இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் புகார் தெரிவித்திருந்தார். இதையேற்று அந்த கடை உடனடியாக அகற்றப்பட்டது.

அகற்றம்

அகற்றம்

தமிழகம் முழுவதும் இது போன்று தலைவர்களின் சிலை அருகே மதுக்கடைகள் இருந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அதை உடனடியாக அகற்றிவிடலாம்.

வதேரா பெயரைவிட என் பெயரைத்தான் பிரியங்கா அதிகமாக சொல்கிறார்... ஸ்மிருதி இரானி சுளீர்வதேரா பெயரைவிட என் பெயரைத்தான் பிரியங்கா அதிகமாக சொல்கிறார்... ஸ்மிருதி இரானி சுளீர்

தேர்தல் முடிந்தவுடன்

தேர்தல் முடிந்தவுடன்

தருவைகுளம் கிராமத்தில் தி.மு.க.வுக்கு வாக்களித்த ஒரு பெரியவர் என்னிடம் கூறும்போது கருணாநிதி மரணத்திற்கு விசாரணை நடத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நானும் தேர்தல் முடிந்தவுடன் இது குறித்து தமிழக முதல்வர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிடுவார் என்றேன்.

அரசியல்

அரசியல்

கமல்ஹாசனுக்கு 65 வயது ஆகிவிட்டது. இதன் பிறகு அவருக்கு அரசியல் ஞானம் பிறந்துள்ளது. ஓடி, ஆடி விளையாடிய வயதில் ஜாலியாக இருந்துவிட்டு தற்போது சினிமாவில் மார்க்கெட் போனதால் அரசியலுக்கு வந்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

கமல்ஹாசனை பார்ப்பதற்காக அவர் பிரசாரக் கூட்டங்களில் கூட்டம் கூடுகிறது. வடிவேல் வந்தால் கூட கூட்டம் கூடும். ஆனால் மக்கள் கமல்ஹாசனுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

English summary
Minister Rajendra Balaji says in Ottapidaram that Kamal Haasan is active in politics only because of his market gets down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X