தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது .. தமிழிசை மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவின் தேர்தல் அறிக்கையை புகழ்ந்த ரஜினிகாந்த்- வீடியோ

    தூத்துக்குடி: நதிகள் இணைப்பு குறித்த பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது என்று பாஜக மாநிலத் தலைவரும், தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இந்தியாவில் உள்ள நதிகளை இணைத்து விட்டாலே நாட்டில் பாதி வறுமை ஒழியும் எனவும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறினார்.

    Rajnikanths opinion about the connection of rivers is good : Tamilisai Welcome

    மேலும், நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் இது தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடனும் தான் பேசியிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்.. ஆதரவு கேட்ட கமலுக்கு ரஜினியின் நாசுக்கான பதில் எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்.. ஆதரவு கேட்ட கமலுக்கு ரஜினியின் நாசுக்கான பதில்

    இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், நதிகள் இணைப்பு குறித்த பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது என்றும் நதிகள் இணைப்பு என்பது நீண்டகால திட்டம் எனவும் கூறினார்,

    முன்னதாக, பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன், செயல்படுத்தக் கூடிய திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

    English summary
    Rajinikanth welcomes BJP election manifesto Is good - Tamilisai happy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X