• search
தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"நாசம் பண்ணி டிரம்ல அடைச்சுட்டான்.. நாங்க ஏழைங்கதான்.. நீதி வேணும்".. கதறும் சாத்தான்குளம் குடும்பம்

|

தூத்துக்குடி: "கழுத்தில் ரத்தக்கறை ஏன் இவ்ளோ இருக்கிறது.. வீட்டுக்குள்ளேயே எங்க புள்ளைய நாசம் பண்ணிட்டுதான், டிரம்மில் சடலத்தை போட்டு வீசியுள்ளனர்.. நாங்க ஏழைங்கதான், ஆனால் நியாயம் கிடைக்காம விட மாட்டோம்" என்று சாத்தான்குளம் 7 வயது சிறுமி கொலை குறித்து குடும்பத்தினர் கதறி அழுது கூறுகின்றனர்.. ஆனால், சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை, டிவி பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட விவகாரத்தால்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது கல்விளை என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர்தான் 7 வயது சிறுமி.. இவருக்கு அப்பா இல்லை.. அம்மாதான் வளர்த்து வந்துள்ளார்.. ரொம்பவும் ஏழ்மையான குடும்பம்.. ஓலை குடிசை வீடு.. அந்த குடிசைக்கு கரண்ட்கூட இல்லை.. அதனால்தான் அதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் டிவி பார்க்க செல்வது வழக்கமாம்.

 saathankulam death: 7 year old girl murder and two arrested

அந்த வீட்டில் உள்ள இளைஞன் பெயர் முத்தீஸ்வரன்.. காலேஜ் படிக்கிறார்.. சம்பவத்தன்றும், முத்தீஸ்வரன் வீட்டில் டிவி பார்க்க சிறுமி சென்றபோது, முத்தீஸ்வரன் நண்பன் நித்தீஸ்வரனும் அங்கு இருந்திருக்கிறார்.. சிறுமி டிவி பார்க்க வீட்டுக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது..

அடிக்கடி சிறுமி டிவி பார்க்க வீட்டுக்கு வருவதால் இவர்கள் எரிச்சல் ஆகி உள்ளனர்.. அதனால் 2 பேரும் சிறுமியை வீட்டை விட்டு துரத்தி உள்ளனர்.. இதனால் கோபமடைந்த சிறுமி, கல்லை எடுத்து அவர்கள் 2 பேர் மீதும் எறிந்ததாகவும், இது நண்பர்கள் 2 பேருக்கும் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால் சிறுமியின் கழுத்தை முத்தீஸ்வரன் இறுக்கமாக பிடித்து தள்ளிவிட்டுள்ளார்.. இதில்தான் சிறுமி உயிரிழந்துள்ளார். இதை பார்த்து பயந்துபோன 2 பேரும் போலீசுக்கு விஷயம் போய்விடக்கூடாது என்று, வீட்டில் இருந்த டிரம்மில் சிறுமியின் சடலத்தை போட்டு, அந்த ஓடைப்பாலம் அருகே கொண்டு போய் போட்டுவிட்டு வந்துள்ளனர்.. இந்த இடம் சிறுமி வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இதனிடையே, மிட்டாய் வாங்க மகளை காணோம் என்று அவரது அம்மா தேடி அலைந்துள்ளார்.. அந்த சமயத்தில்தான் சிறுமியின் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.. உடனடியாக போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது.. சிறுமி வழக்கமாக எங்கெல்லாம் போவார் என்று விசாரிக்கவும்தான், டிவி பார்க்கும் வீடு பற்றி தெரியவந்தது.. சந்தேகத்தின்பேரில் நண்பர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தபோது உண்மையை கக்கிவிட்டனர்.

அரசின் "காலை சுற்றிய சாத்தான்குளம்".. அடுத்தடுத்து அதிரும் சம்பவங்கள்.. சிறுமி கொலையால் அதிர்ச்சி

இதை பற்றி மாவட்ட எஸ்பி சொல்லும்போது, "சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்த 2 மணி நேரத்தில், 2 பேரை கைது செய்துள்ளோம்.. ஆனால், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை.. சிறுமியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதில் கீழே விழுந்து இறந்துவிட்டதாக முத்தீஸ்வரன் வாக்குமூலம் தந்துள்ளார்.. சடலத்தை டிரம்மில் போட்டு, பாலத்துக்கு அடியில் கொண்டு வந்து போடுவதற்கு நண்பர் நித்தீஸ்வரர் உதவியுள்ளார்.. எனினும் போஸ்ட் மார்ட்ம் ரிப்போர்ட் வந்தால்தான் உறுதியாக தெரியும்" என்றார்.

ஆனால், சிறுமியின் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.. எங்க வீட்டு பொண்ணை வீட்டுக்குள்யே வெச்சு பலாத்காரம் செய்துவிட்டனர்.. அதற்கு பிறகுதான் கொன்று கொண்டு வந்து போட்டுள்ளனர்.. எங்க குழந்தையை கொன்ன இவன், ஏற்கனவே கஞ்சா வித்துட்டு இருந்தவன்.. போதையில்தான் இந்த அக்கிரமத்தை செய்திருக்காங்க.. நாங்க ஏழைதான்.. ஆனால் நியாயம் கிடைக்காம விட மாட்டோம்" என்று கதறுகிறார்கள்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
saathankulam death: 7 year old girl murder and two arrested
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X