• search
தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

நேர்மையாக இருந்தால்.. லூசு, பைத்தியக்காரன் என்று சொல்வாங்க..காதில் வாங்காதீங்க.. சகாயம் ஐஏஎஸ்

|

தூத்துக்குடி: டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவாகரம் குறித்து தூத்துக்குடியில் பேசிய சகாயம் ஐஏஎஸ், "கடினமாக உழைத்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்படும்" என்று வேதனை தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கின்ஸ் இலவச போட்டித்தேர்வு அகாடமி செயல்படுகிறது. இங்கு பயின்று, இந்த ஆண்டு பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 124 மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கேடயத்தை சகாயம் ஐஏஏஸ் வழங்கி சிறப்பித்தார்.

அப்போது அவர் பேசும் போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 4 போன்ற ஒரு சில தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த மன வேதனை அளிப்பதாகக தெரிவித்தார். இந்த முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதகாவும் சகாயம் ஐஏஎஸ் விளக்கம் அளித்தார்.

ஸ்டாலின் படத்துடன் திருமண அழைப்பிதழ்... 4 கிராம் தங்ககாசு பரிசு... நாமக்கல் மாவட்ட திமுக

கேள்விக்குறியாகிவிடும்

கேள்விக்குறியாகிவிடும்

வேலையில்லாதது இப்போது பெரும் பிரச்னையாக மாறிவிட்ட இந்த சூழலில். இதுபோன்ற முறைகேடுகளால் பல ஆண்டுகள் இரவு, பகலாகக் கஷ்டப்பட்டு உழைத்துவரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்படும் என்று அச்சம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இத்தேர்வுகள் முறைகேடுகள் இல்லாமல் நடைபெறும் என சகாயம் நம்பிக்கை தெரிவித்தார்.

முற்றுப்புள்ளி வைப்பார்கள்

முற்றுப்புள்ளி வைப்பார்கள்

நேர்மையும் திறமையும் உடைய அதிகாரிகள் டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் சகாயம் உறுதி தெரிவித்தார். தற்போதைய போட்டி மிகுந்த சூழலில், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவது எளிதான காரியம் அல்ல என்று கூறிய சென்னை அறிவியல் கழகத்தின் தலைவரான சகாயம், கடினமான உழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்றார்.

அதிகம் பேர் வெற்றி

அதிகம் பேர் வெற்றி

அரசுப் பள்ளிகள்தான் நம்நாட்டு ஏழைக் குழந்தைகளின் கல்விக்கான கடைசி நம்பிக்கையாக திகழ்வதாக தெரிவித்த சகாயம் ஐஏஏஸ், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

நேர்மை வேண்டும்

நேர்மை வேண்டும்

தேர்வில் வெற்றிபெற்று அரசுப் பணியில் சேர இருக்கும் மாணவர்கள், நான் என்ற அகந்தையை மனதிலிருந்து அகற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தற்போதைய நிலையில் லஞ்சம், ஊழல் நிறைந்திருப்பதை வருத்தத்துடன் பார்க்கிறேன் என் வேதனை தெரிவித்தார். மாற்றங்களை ஒரு நேர்மையான தமிழ்ச் சமூகத்தை உருவாக்க இளைஞர்களால்தான் முடியும் என்றும் அரசுப் பணியில் நேர்மையானவர்களாக நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றும் அங்கிருந்த மாணவர்களிடம் கூறினார்.

காதில் வாங்காதீர்கள்

காதில் வாங்காதீர்கள்

நேர்மை என்றால் ஓராண்டு நேர்மை, மூன்றாண்டு நேர்மை, அதன்பிறகு ஓரளவு நல்ல பெயர் வாங்கிவிட்டால் சாதாரணமாக இருந்து கொள்ளலாம் என்ற எண்ணம் வரவே கூடாது என்றார் நேர்மையாகப் பணி செய்பவனைப் பார்த்தால் லூசு, பைத்தியக்காரன் என்றுதான் சொல்வார்கள். இந்தப் பேச்சுகள் எதையுமே காதில் வாங்கக்கூடாது. பணியில் நேர்மை ஒன்றுதான் நமக்கான மகுடம் என்றார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
sagayam ias talk about tnpsc scam in thothukudi. he said Honest and competent authorities will put an end to tnpsc scams
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more