தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராதிகா இந்த தொகுதில களமிறங்கி வெற்றியை விதைக்க போறாராமே... இதுக்கு சரத்குமார் சொன்ன பதிலை பாருங்க!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ராதிகா சரத்குமார் தென்மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சமக தலைவர் சரத்குமார் கூறினார்.

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை வரலாறு காணாத வகையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வு கண்டிப்பாக இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

1 அல்லது 2 சீட்டுகளுக்காக கூட்டணியிலிருந்து போட்டியிட மாட்டோம் என்று முடிவுஎடுத்துதான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றும் சரத்குமார் தெரிவித்தார்.

சமக எடுத்த அதிரடி முடிவு

சமக எடுத்த அதிரடி முடிவு

தமிழக சட்டசபை தேர்தல் களம் ஜெட் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என அரசியல் தலைவர்களும் 24 மணி நேரமும் பிசியாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் தேர்தலின்போதும் சில கட்சிகளின் கூட்டணி இடம் மாறுவது வழக்கம். அந்த வகையில் கட்சி தொடங்கியதில் இருந்து ஒன்றிரண்டு சீட்டுக்காக திமுக, அதிமுக என மாறிமாறி ஒடி விளையாடி வந்த சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறியது.

மாற்றத்தை உருவாக்குவோம்

மாற்றத்தை உருவாக்குவோம்

சமத்துவ மக்கள் கட்சியும், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை துவங்கியதாக அறிவித்துள்ளன.இந்த முறை எப்படியாவது கணிசமான இடங்களை கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள சமக தலைவர் சரத்குமார் சசிகலா, கமல்ஹாசன் என பலரை சந்தித்து வாருங்கள் மாற்றத்தை உருவாக்குவோம் என அழைப்பு விடுத்து வருகிறார்.

பெட்ரோல் விலை எதிரொலிக்கும்

பெட்ரோல் விலை எதிரொலிக்கும்

இந்த நிலையில் சமகவின் பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை வரலாறு காணாத வகையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வு கண்டிப்பாக இந்த தேர்தலில் எதிரொலிக்கும்.

ராதிகா எங்கு போட்டி?

ராதிகா எங்கு போட்டி?

கட்சியின் அடுத்தகட்ட தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.சமக தேர்தல் விகிதாச்சாரம் என்ன என்பதை கண்டறிய தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம். 1 அல்லது 2 சீட்டுகளுக்காக கூட்டணியிலிருந்து போட்டியிட மாட்டோம் என்று முடிவுஎடுத்துதான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். ராதிகா சரத்குமார் தென்மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சரத்குமார் கூறினார்.

English summary
Sarathkumar has said a decision on Radhika Sarathkumar contesting in the Southern District would be taken at the general body meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X