தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாற்றி பேசிய பெண் போலீஸ்.. அதிரடி கைதுக்கு வாய்ப்பு.. பரபரப்படையும் சாத்தான்குளம் கொலை வழக்கு!

பெண் போலீஸ் ஒருவர் கைதாவதாக தகவல் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: முரண்பட்ட தகவலை பெண் போலீஸ் சொல்லிவிட்டாராம்.. அதனால், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் போலீஸ் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம் மரணம், இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்று.. தமிழக அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது... சிபிஐ இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி வழக்கு தொடர்பான விசாரணையை நடந்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.. இதையடுத்து சிபிசிஐடி நடத்திய விசாரணையின் அடிப்படையில் அதிரடி கைதுகளும் நடந்தன.

 Sathankulam death case: woman cop might be arrest

தற்போது, சாத்தான்குளம் வழக்கு விசாரணை சிபிஐ வசம் சென்றிருக்கிறது.. நேற்றுகூட சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.. அப்போது, சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டுஆய்வு செய்யப்பட்டது.

மேலும், தந்தை, மகன் கொலை வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.. இதைதவிர, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 போலீசாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை கைதிகளை தாக்கியது ஏன்? எவ்வாறு தாக்கப்பட்டனர்? உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Recommended Video

    சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் - ஐநா கோரிக்கை

    "சைலண்ட் மோடில் ரஜினி".. தாவ தயாராகும் அந்த 4 பேர் யார்.. உருவாகிறதா கூட்டணி.. பரபரக்கும் அதிமுக!

    இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக பெண் போலீஸ் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... விசாரணையில் அவர் ஒன்னுக்கு ஒன்று சம்பந்தமில்லாத, அதேசமயம் முரண்பட்ட தகவலை சொல்லி இருக்கிறாராம்.. அதனால், அந்த பெண் காவலர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Sathankulam death case: woman cop might be arrest
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X