தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. என்ன நடந்தது?.. காவல் நிலையத்தில் நீதிபதிகள் அதிரடி விசாரணை!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து கோவில்பட்டி மாவட்ட குற்றவியல் நீதிபதிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி உள்ளது.

லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

சாத்தான்குளம்.. நிர்வாணமாக நிற்க வைத்து.. ரத்தம் சொட்ட சொட்ட அடித்தனர்.. ஜெயராஜ் மனைவி கதறல்!சாத்தான்குளம்.. நிர்வாணமாக நிற்க வைத்து.. ரத்தம் சொட்ட சொட்ட அடித்தனர்.. ஜெயராஜ் மனைவி கதறல்!

தாமாக முன் வந்து விசாரணை

தாமாக முன் வந்து விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. தாமாக முன் வந்து இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை தற்போது சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் மரணம் குறித்து கோவில்பட்டி மாவட்ட குற்றவியல் நீதிபதிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று என்ன விசாரணை

நேற்று என்ன விசாரணை

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு போலீஸ் காரணம் என குற்றச்சாட்டு உள்ளது. அதோடு நீதிமன்ற காவலில் இருக்கும் போது இவர்கள் மரணம் அடைந்ததாக ‘death in judicial custody' என்று FIR போட்டிருக்கிறார்கள். இதனால் தற்போது கோவில்பட்டி மாவட்ட குற்றிவியல் நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இதை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார்கள்.

நீதிபதிகள் தீவிரம்

நீதிபதிகள் தீவிரம்

நேற்று கோவில்பட்டி கிளை சிறையில் இரண்டு பேரும் அடைக்கப்பட்டு இருந்த செல் சோதனை செய்யப்பட்டது. ஜெயில் வார்டனிடம் விசாரணை செய்யப்பட்டது. அதேபோல் அவர்களின் சிறையில் இருந்த சில ஆதாரங்கள் பெறப்பட்டது. சிறைக்குள் இருவரும் கொண்டுவரப்பட்ட போது என்ன நிலையில் இருந்தனர் என்பதும் விசாரிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் பெறப்பட்டு இருக்கிறது.

Recommended Video

    சாத்தான்குளம் சம்பவத்தை ஆதரித்து பதிவு... காவலர் அதிரடி சஸ்பெண்ட்
    இன்று மீண்டும்

    இன்று மீண்டும்

    இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இன்று கோவில்பட்டி மாவட்ட குற்றிவியல் நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இதை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அன்று பணியில் இருந்த அதிகாரிகளிடம் இவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள். இன்றுதான் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக பெர்னார்டு சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் ஏற்கனவே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sathankulam Death: Judges started an inquiry in Kovilpatti police station morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X