தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்? என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டது ஏன் என்று விவரம் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19ம் தேதி லாக்டவுன் நேரத்தில் கடை திறந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் இரண்டு நாட்கள் கழித்து மரணம் அடைந்தனர்.

அவர்கள் இருவரும் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சிபிஐக்கும் மாற்றப்பட உள்ளது. அதற்கு முன் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

சாத்தான்குளத்தில் நடந்தது என்ன - பென்னிக்ஸ் நண்பர்கள் ஐவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜர் சாத்தான்குளத்தில் நடந்தது என்ன - பென்னிக்ஸ் நண்பர்கள் ஐவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜர்

இடமாற்றம்

இடமாற்றம்

இந்த சாத்தான்குளம் மரணம் வழக்கில் எஸ்ஐ ராகுகணேஷ், முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இவர்கள் ஐந்து பேர் நீதிமன்ற விசாரணைக்கு பின் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்கள் மதுரை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஏன் மாற்றம்

ஏன் மாற்றம்

இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார்கள் என்று விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நேற்று இவர்கள் பேரூரணி சிறையில் தாக்கப்பட்டதாக தகவல்கள் வருகிறது. இவர்கள் நேற்று சிறையில் இருந்த போது சக கைதிகளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வருகிறது. நேற்று மாலை 4 மணிக்கு இவர்கள் அங்கிருக்கும் சிறை கைதிகள் உடன் பேசி கொண்டு இருந்துள்ளனர். அப்போது பிரச்சனை வந்ததுள்ளது.

போலீசார் சண்டை

போலீசார் சண்டை

இதில் சக கைதிகள் கைது செய்யப்பட்ட போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் ஒன்று சண்டையில் முடிந்து போலீசார் கைது செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். இதையடுத்தே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த தாக்குதல் தொடர்பாக பேரூரணி சிறை வார்டன் விசாரணை நடத்தி வருகிறார்.

திருநெல்வேலி ஜெயில்

திருநெல்வேலி ஜெயில்

இந்த நிலையில் 5 போலீசாரும் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். முன்னதாக இவர்கள் எல்லோரையும் திருநெல்வேலி பாளையம்கோட்டை சிறைக்கு அனுப்ப திட்டமிட்டு. ஆனால் பாளையம்கோட்டை சிறையில் 1000 பேருக்கும் அதிகமாக இருக்கிறார்கள். அங்கே இவர்களை அடைத்தால் பாதுகாப்பாக இருக்காது என்று போலீசார் கருதி உள்ளனர். இதையடுத்தே இவர்கள் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

Recommended Video

    சாத்தாங்குளம் நீதிக்கு 3 நீதி தேவதைகள் தான் காரணம்

    English summary
    Sathankulam Death: Reason behind Why CBCID moved the 5 accused to Madurai Central Jail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X