தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாத்தான்குளம் வழக்கு.. உடல்நிலை சரியில்லை.. சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்!

Google Oneindia Tamil News

கோவில்பட்டி: சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். தனது உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவை உலுக்கிய சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகள் எல்லோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதலில் எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் கைது செய்யப்பட்டனர். அதன்பின் கடைசியாக காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டார்.

Sathankulam Death: Special SI PaulDurai applied for Bail

இவர்கள் எல்லோரும் தற்போது சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.5 போலீசாரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சார்பாக ஏற்கனவே இந்த வழக்கில் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். தனது உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..

சப்போர்ட் இல்லாத சச்சின்.. திரும்பி வந்துவிடுங்கள்.. கடைசியாக அழைக்கும் காங்.. இன்று என்ன நடக்கும்? சப்போர்ட் இல்லாத சச்சின்.. திரும்பி வந்துவிடுங்கள்.. கடைசியாக அழைக்கும் காங்.. இன்று என்ன நடக்கும்?

இவரின் ஜாமீன் மனு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.சாத்தான்குளம் வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

லாக்டவுன் நேரத்தில் கடை திறந்ததாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.கடந்த மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் இரண்டு நாட்கள் கழித்து மரணம் அடைந்தனர்.

English summary
Sathankulam Death: Special SI PaulDurai applied for in Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X