தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு.. சிபிஐக்கு அதிரடி மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு!

Google Oneindia Tamil News

கோவில்பட்டி: கோவில்பட்டி சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.

Sathankulam Death: The case has been transferred to CBI

லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீசார் ஏற்கனவே டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும் என்றும் மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று நேற்றே தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார்.

நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டபின் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனால் இன்று மதுரை ஹைகோர்ட்டில், வழக்கை சிபிஐக்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று மதுரை ஹைகோர்ட் கிளை அறிவித்து இருந்தது.

Recommended Video

    Sathankulam Incident : 'அந்த 5 படங்களை எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன்' - Director Hari வேதனை

    இதையடுத்து தற்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிஐக்கு வழக்கை மாற்றுவது தொடர்பாக தமிழக உள்துறை அரசாணை வெளியீட்டுள்ளது.

    English summary
    Sathankulam Death: The case has been transferred to CBI by TN govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X