தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் மரணம்.. 12 மணி நேரம் 3 பேரிடம் "தனி தனியாக" நடந்த விசாரணை.. ஏன்? - அதிரடி பின்னணி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சாத்தான்குளம் மரணம் தொடர்பான வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட மூன்று போலீஸ் அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

Recommended Video

    Big Breaking | Sathankulam மரணம்... 3 காவலர்களுக்கு நீதிமன்ற காவல்!

    சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

    சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. நேற்று எஸ்ஐ ராகுகணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

    சாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு.. ஐஜி முருகன் தகவல்சாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு.. ஐஜி முருகன் தகவல்

    கொலை வழக்கு

    கொலை வழக்கு

    இவர்கள் எல்லோரின் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று முக்கிய போலீஸ் அதிகாரிகள் இன்று விசாரணை செய்யப்பட்டனர். முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், நாவலர் முருகன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதிகாலையில் இருந்து வேறு வேறு இடங்களில் சிபிசிஐடி இவர்களை தேடி பிடித்து கைது செய்தனர்.

    தனியாக விசாரணை

    தனியாக விசாரணை

    அதன்பின் இவர்கள் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அங்கே வைத்து இவர்களிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டது. இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் சிபிசிஐடி விசாரணை அதிகாரி டிஎஸ்பி அணில் குமார், சிபிசிஐடி ஐஜி சங்கர் உள்ளிட்டோர் தனி தனியாக விசாரணை நடத்தினார்கள். மொத்தமாக 12 மணி நேரம் இவர்களிடம் விசாரணை நடந்தது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    ஏதேனும் உண்மைகளை மறைகிறார்களா? ஒரே விஷயத்தை சொல்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதற்காக இவர்களிடம் சிபிசிஐடி தனி தனியாக விசாரணை செய்தது. ஜெயராஜ் பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டதில் இருந்து நடந்த அனைத்து விஷயங்களும் இவர்களிடம் விசாரிக்கப்பட்டது . அவர்களிடம் விசாரணை முடிந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

    மருத்துவ சோதனை

    மருத்துவ சோதனை

    முன்னதாக இவர்களுக்கு மருத்துவ சோதனையும் செய்யப்பட்டது. ஏற்கனவே எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் காவலர் ஒருவர் அப்ரூவர் ஆகி இருப்பதாக தகவல்கள் வருகிறது. அந்த குறிப்பிட்ட காவலர் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவரின் வீட்டில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த குறிப்பிட்ட காவலர் அப்ரூவராக மாறி இருப்பதால் அவரிடம் ஏதாவது ஆதாரம் இருக்கலாம் என்று சிபிசிஐடி நமபுகிறது.

    யார் அப்ரூவர்

    யார் அப்ரூவர்

    இதனால் அவரின் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காலையில் இருந்து அங்கே விசாரணை நடந்து வருகிறது. அந்த குறிப்பிட்ட காவலர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. அவர் இன்று இரவுக்குள் கைது செய்யப்படலாம் என்றும் கூறுகிறார்கள். இன்னும் ஒரு காவலரும் அப்ரூவர் ஆக உள்ளார் என்று கூறுகிறார்கள். இவரிடமும் சிபிசிஐடி தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Sathankulam Death: TN CB-CID investigated the accused in the case for 12 hours straight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X