• search
தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் மர்ம மரணம்.. போஸ்ட் மார்ட்டத்தை வீடியோ எடுக்க ஹைகோர்ட் உத்தரவு

|

தூத்துக்குடி: கைது செய்த சில மணி நேரங்களிலேயே மகன் இறந்துவிட்டார்.. அடுத்த சில மணி நேரத்தில் அவரது தந்தையும் இறந்துவிட்டார்.. கோவில்பட்டி ஜெயிலில் அடுத்தடுத்து நடந்த 2 மர்ம மரணங்கள் தமிழகத்தையே உலுக்கி எடுத்து வருகின்றன. இந்நிலையில், உயிரிழந்த தந்தை, மகனின் போஸ்ட் மார்ட்டத்தை வீடியோ பதிவு செய்ய மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

  சாத்தாங்குளம் தந்தை மகனுக்கு நடந்தது என்ன? ஜெயராஜ் மனைவி கதறல்

  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ்... காமராஜர் சிலை அருகில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 19-ம் தேதி, கடையை கூடுதல் நேரமாக திறந்து வைத்திருந்தது தொடர்பாக பிரச்சனை வெடித்துள்ளது.

  மாலை 7.30 மணிக்கு சாத்தான்குளம் 2 எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.. கடையை ஏன் இவ்வளவு நேரம் திறந்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.. ஜெயராஜ் அவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கியதால் "ஸ்டேஷனுக்கு வா" என்று ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றுள்னர்.

  சாமி பேர் சொன்னாலே ஸ்டாலினுக்கு கோபம் வரும்.. முதல்வருக்கு அப்படி இல்லை.. ராஜேந்திர பாலாஜி பொளேர்!

  மகன்

  மகன்

  இந்த விஷயம் ஜெயராஜ் மகன் பென்னிஸ்க்கு பிறகுதான் தெரியவந்தது.. அதனால் அவர் பைக் எடுத்துக் கொண்டு பின்னாடியே ஸ்டேஷன் போயுள்ளார்.. அங்கு சென்று "ஏன் அப்பாவை கூட்டிட்டு வந்தீங்க" என்று சம்பந்தப்பட்ட 2 எஸ்ஐ-க்களிடமும் கேள்வி எழுப்பி உள்ளதாக தெரிகிறது. மேலும் மகன் முன்பே ஜெயராஜை போலீஸார் தாக்கியதாகவும் தெரிகிறது.

  போலீஸார்

  போலீஸார்

  இதனால் இன்னும் ஆத்திரமடைந்த பென்னிக் போலீசாரிடம் கேள்வி எழுப்ப, அவரையும் லத்தியால் போலீசார் அடித்தார்கள் என்கிறார்கள். அதுமட்டுமல்ல,, அவரது ஆசன வாய் வழியே லத்தியால் குத்தி கொடுமைப்படுத்தியதில் காயம் ஏற்பட்டு ரத்த கசிவும் ஏற்பட்டதாம்.. தன்னால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என்று அழுதிருக்கிறார் போலும்.. காயங்கள் இருந்தும், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு கோவில்பட்டி ஜெயில் அடைத்தனர்.

   நெஞ்சுவலி

  நெஞ்சுவலி

  இந்நிலையில், நேற்று இரவு நெஞ்சுவலிப்பதாக கூறிய பென்னிக்ஸ் கூறியுள்ளார்.. அதனால் அவரை போலீசார் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே பென்னிக்ஸ் உயிரிழந்தார். இதனிடையே இன்று காலை ஜெயராஜும் உயிரிழந்தார்.

  சாத்தான்குளம்

  சாத்தான்குளம்

  அடுத்தடுத்த சில மணி நேரங்களில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மகன், தந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவர்களின் மரணம் கோவில்பட்டியையே அலற வைத்தது.. சாத்தான்குளத்தில் போலீஸாரைக் கண்டித்து வணிகர்கள் கடைகளை அடைத்து பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. தந்தை மகனை தாக்கியதில் சாத்தான்குளம் போலீசார் மீது நடவடிக்கை என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

  போராட்டம்

  போராட்டம்

  மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இதையடுத்து, விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட 2 எஸ்.ஐ-ககளும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதைதவிர, உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

   மர்ம மரணங்கள்

  மர்ம மரணங்கள்

  எனினும் இரு மர்ம மரணம் குறித்து உறுதியான எந்த தகவலும் வரவில்லை.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் எதனால் இவர்கள் இறந்தார்கள் என்று தெரியவரும்.. ஆனால் அடுத்தடுத்து தந்தை - மகன் இறந்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.. திமுக தலைவர் ஸ்டாலின், தொகுதி எம்பி கனிமொழி, மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர், இந்த மரணங்களில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர்.

  பரபரப்பு

  பரபரப்பு

  இந்நிலையில், பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்திய நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றி தொடர்ந்திருந்தார். அதில், உயிரிழந்த 2 பேரின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யக்கோரியிருந்தார். மேலும் அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

  உத்தரவு

  உத்தரவு

  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது... வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில்பட்டி ஜெயிலில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 டாக்டர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது... மேலும் இந்த போஸ்ட் மார்ட்டத்தை வீடியோவாக பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  son and father died near thoothukudi, police inquiry is going on it
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X