திருச்செந்தூர் கும்பாபிஷேகம்: 600 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை.. கோவில் வாசலுக்கே ஸ்பெஷல் பஸ்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வாசலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ஜூலை 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கீழ்கண்ட இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும் மற்றும் ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை, திருச்சி, புதுச்சேரி. கும்பகோணம், சேலம், பெங்களூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தச் சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை கோட்டம் சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த மூன்று தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்தும் தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் மொத்தம் 30 சிறப்பு பேருந்துகள் திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு இயக்கப்பட உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications