தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மழை பெய்து வறட்சி நீங்கனும்... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்

Google Oneindia Tamil News

திருச்செந்தூர்: மழை வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை மற்றும் பல மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

Special Yagam in Thiruchendur Subramaniya Swamy Temple for Rain

இதையடுத்து தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலும், மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து, காசி விஸ்வநாதர் சன்னதி முன்பு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

8 வருட அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்குலைவே தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம்.. ஸ்டாலின் அறிக்கை 8 வருட அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்குலைவே தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம்.. ஸ்டாலின் அறிக்கை

முன்னதாக, கோவில்களில் மழைக்காக யாகம் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், மத நம்பிக்கை தொடர்பான விஷயத்தில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

English summary
Drought In Tamilnadu: Special Yagam in Thiruchendur Subramaniya Swamy Temple for Rain Drought In Tamilnadu: Special Yagam in Thiruchendur Subramaniya Swamy Temple for Rain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X