தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனிமொழியிடம் தோற்று போவதற்காகவே தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் தமிழிசை- ஸ்டாலின் நக்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்துக்கு துரோகம் செய்யக்கூடிய பாஜக ஆட்சி தொடரலாமா- கனிமொழி கேள்வி-வீடியோ

    தூத்துக்குடி: திமுக உறுப்பினர் கனிமொழியிடம் தோற்று போவதற்காகவே தமிழிசை இங்கு போட்டியிடுகிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி சிறப்பாக செயல்பட்டுள்ளார். திமுகவிலிருந்து சிறந்த வேட்பாளரை தூத்துக்குடி மக்கள் பெற்றிருக்கிறார்கள். தூத்துக்குடி மக்கள் பிரச்சினைகளுக்கு கனிமொழி தீர்வு காண்பார்.

    தோற்பதற்காகவே தமிழிசை இங்கு போட்டியிடுகிறார். பாஜக செல்வாக்கு மிக்க மாநிலங்களில்தான் கலவரங்கள் அதிகமாக நடந்துள்ளன. தமிழ்நாட்டையும் கலவர பூமியாக்க பார்க்கிறார்கள். ஆனால் அதை திமுக அனுமதிக்காது. நிரந்தர சட்டம் இயற்றப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.

    பாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும்.. வரவேற்காவிட்டால்தான் ஆச்சரியம்.. ஸ்டாலின்பாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும்.. வரவேற்காவிட்டால்தான் ஆச்சரியம்.. ஸ்டாலின்

    18-இல் பதிலடி

    18-இல் பதிலடி

    நச்சு ஆலையாக மாறிவிட்ட ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி வழியில் மக்கள் போராடினார்கள். அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை தமிழக அரசு சுட்டுக் கொன்றது. எடப்பாடி அரசை தூக்கி எறிய வரும் 18-ஆம் தேதி தமிழக மக்கள் பன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அமைதி

    அமைதி

    எடப்பாடி அரசுக்கு தமிழக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. வடமாநிலத்தில் ஒரு பிரச்சினை என்றால் மோடி அமைதியாக இருந்துவிடுவாரா.

    அக்கறை

    அக்கறை

    பிரதமர் மோடி பாசிச மனப்பான்மை கொண்டவர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீரென்று இந்தியா மீது அக்கறை வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்.

    விமான நிலையம்

    விமான நிலையம்

    தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தப்படும். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். 13 பேர் உயிரிழக்க காரணமான காவல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நல வாரியம்

    நல வாரியம்

    குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம், அணுமின் திட்டங்கள் மாவட்ட மக்களின் அனுமதி பெற்றே நிறைவேற்றப்படும். மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்தார்.

    English summary
    MK Stalin says that Tamilisai will lose this election. Thats why she contested against Kanimozhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X