தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.. ஸ்டெர்லைட் நிறுவனம்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது எனவும் அந்த ஆலைக்கு பூட்டி சீல் வைத்தது சரி என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் இன்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Sterlite Copper expressed shock over the Madras High Court verdict

இதையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் அந்த நிறுவனத்தின் சிஇஒ பங்கஜ் குமார் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டெர்லைட்டை சார்ந்த பலருக்கும் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சார்ந்திருந்த 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்...தூத்துக்குடி மக்களின் உணர்வுக்கு...தியாகத்துக்கு கிடைத்த வெற்றி...டிடிவி தினகரன்!! ஸ்டெர்லைட்...தூத்துக்குடி மக்களின் உணர்வுக்கு...தியாகத்துக்கு கிடைத்த வெற்றி...டிடிவி தினகரன்!!

25 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி ஸ்டெர்லைட் இயங்கி வந்திருக்கிறது என்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையால் தாமிரத்தை இறக்குமதி செய்வது நாட்டிற்கே பெரிய இழப்பு தீர்ப்பின் முழு விவரம் தெரிந்த பின் சட்டபூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. எங்களின் செயல்பாடுகளின் பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான தன்மையை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் " இவ்வாறு ஸ்டெர்லைட் சிஇஒ பங்கஜ்குமார் தெரிவித்தார்.

English summary
Sterlite Copper on Tuesday expressed shock over the Madras High Court verdict rejecting its plea seeking reopening of its smelting plant in Thoothukudi. company said We firmly believe in the safe and environmentally sound nature of our operations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X