தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'ஸ்டெர்லைட் ஆலை' திமுக ஆட்சியில் நிரந்தரமாக மூடப்படும்: முக ஸ்டாலின் உறுதி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக திமுக ஆட்சியில் மூடப்படும் என்று ஒட்டப்பிடாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்காளர்களிடம் உறுதி அளித்தார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியின் கோரம்பள்ளம் பகுதியில் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் முக ஸ்டாலின் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் "கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஏற்கனவே நீங்கள் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலில் வாக்களித்து இருப்பீர்கள். அப்போது நான் கனிமொழிக்காக இங்கு பிரச்சாரத்திற்கு வந்த போது பெரும் வரவேற்பு அளித்தீர்கள்.

ஃபுல் போதை.. கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்.. ஆஸ்பத்திரியில் அட்மிட்! ஃபுல் போதை.. கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்.. ஆஸ்பத்திரியில் அட்மிட்!

தூத்துக்குடி வெள்ளம்

தூத்துக்குடி வெள்ளம்

இப்போது ஒட்டப்பிடாரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.ஏதோ தேர்தல் நேரத்தில் உங்களை எல்லாம் சந்திக்கிறேன் என எண்ண வேண்டாம். ஏனெனில் தூத்துக்குடியில் வெள்ளம் வந்த போது, நாங்கள் மக்களுக்காக எப்படி நிவாரணப்பணிகளில் ஈடுபட்டோம் என்பது தெரியும்.

ஆறுதல் சொன்னோம்

ஆறுதல் சொன்னோம்

அதேபோல் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்ட போது, இறந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ஆறுதல் சொன்னோம். இதேபோல் பல மக்கள் பணிகளில் உங்களோடு இருந்து பாடுபட்டது திராவிட முன்னேற்ற கழகம். ஆக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உங்களுக்காக போராடுகிற, பணியாற்றுகிற அந்த உரிமையுடன் உங்களிடத்தில் உதய சூரியனுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

எடப்பாடி ஆட்சி

எடப்பாடி ஆட்சி

18ம் தேதி நடந்த தேர்தலில் நிச்சயமாக மோடி வீட்டுக்கு போகப்போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதேபோல் இன்னும் இரண்டு வாரத்தில் எப்படி வீட்டுக்கு போக போகிறோம் என எடப்பாடி அரசும் நினைக்கும்" இவ்வாறு கூறினார்.

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட்

மேலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் தமிழகத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலை திமுக ஆட்சியில் மூடப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார். மேலும் தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில் சேவைகள் கொண்டுவரப்பபடும் என்றும் உறுதி அளித்தார்.

English summary
tuticorin sterlite copper will be closed permanently by dmk rule: says mk stalin in ottapidaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X