தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது.. டென்ஷனில் தூத்துக்குடி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது- வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அரிராகவன் மற்றும் தாளமுத்துநகர் மைக்கேல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ் விநியோகம் செய்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கடலூர் மாவட்டத் திலிருந்து வந்த நடேசன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Sterlite protester advocate hari ragavan and michael arrested by police in tuticorin

    போராட்டத்துக்கு பின்புலமாக இருந்து தூண்டியதாக அவர்கள் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாக தெரிகிறது. அதன் அடிப்படையில், தூத்துக் குடி மாவட்டம் பண்டாரம்பட்டியை சேர்ந்த கருவேலம் என்பவரது மகன் சந்தோஷ் மற்றும் வழக்கறிஞர் ஹரி ராகவன் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவானது.

    சந்தோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதை கண்டித்த பண்டாரம்பட்டி கிராம மக்கள் இரவு முழவதும் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் ஊர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கடுங்குளிரிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அரிராகவன் மற்றும் தாளமுத்து நகர் மைக்கேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அடுத்தடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Sterlite protester advocate Hari ragavan and Michael arrested by police in Tuticorin. Pandarampatti village people opposed the arrest and demanded to release them mimmediatly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X