தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4.5 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.. அமைச்சர் தகவல்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து அரசு ஆய்வு செய்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்றார்.

Tamil Nadu is the first in protecting the environment in the country.. minister karupanan

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடந்த 1972-ம் ஆண்டு ஐநா சபை ஜூன் 5-ம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாட அறிவித்தது.

தண்ணீர் பஞ்சம்.. நடுத்தெருவில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பிடித்த திமுக எம்எல்ஏ மாசு! தண்ணீர் பஞ்சம்.. நடுத்தெருவில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பிடித்த திமுக எம்எல்ஏ மாசு!

இந்த கொண்டாட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் நீர், நிலம், காற்று இதில் ஏதாவது ஒன்றை முக்கிய கருப்பொருளாக எடுத்து கொள்ளுமாறு, ஐநா சபை வலியுறுத்தியுள்ளது. அதன்படி இந்த ஆண்டில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மக்களுக்கு தூய்மையான காற்று கிடைப்பதற்காக, காற்றில் கலந்திருக்கும் மாசின் அளவை குறைக்க நடவடிக்கை எடுப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.

காற்று சுத்தமானதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் சிப்காட் பகுதிகளில் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளின் புகை கூண்டுளில் காற்று மாசை கண்காணிக்கும் மானிட்டர் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ளெியேறும் புகை அதிகமாக இருந்தால் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு உடனடியாக குறுந்தகவல் வந்துவிடும்.

பின்னர் அந்த ஆலைக்கு செல்லும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். மேலும் பேசிய அமைச்சர் தமிழகத்தில் எந்த இடத்திலும் நச்சு புகை வெளியேறாதவாறு, அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார்.

லாரிகளில் நிலக்கரி ஏற்றி செல்லும் போது தார் பாய் போட்டு மூடாமல் சென்றால் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகளவில் மரங்கள் வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் மரக்கன்றுகள் அரசு சார்பாக நடப்பட்டு வருவதாக கூறினார்.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சாலையோரங்களில் அதிக மரங்கள் நடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் நான்கரை கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக கூறினார் அமைச்சர் கருப்பணன்.

இந்தியாவிலேயே தமிழகம் தான் மரக்கன்றுகளை நடுவதிலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

English summary
Minister of Environment Karupanan has said that the Government of Tamil Nadu will not implement any program against the people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X