தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்த்துக் கொண்ட பாஜக 'சீனியர்கள்'

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசை சவுந்தரராஜனை பழிதீர்த்துக் கொண்ட பாஜக சீனியர்கள்

    தூத்துக்குடி: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வைக்கும் முயற்சியாக தூத்துக்குடியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    தமிழிசை சவுந்தரராஜனின் தலைவர் பதவி காலம் முடிந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் 'டெல்லி' லாபிகள் மூலம் தமது பதவியை தொடர்ந்து தமிழிசை தக்க வைத்துக் கொண்டார்.

    தமிழக பாஜகவின் சீனியர்கள் பலரும் தமிழிசை மீது ஏகப்பட்ட புகார்களை டெல்லி மேலிடத்தில் தெரிவித்தனர். அவரை மாற்றிவிட வேண்டும் என்பதில் எச்.ராஜா உள்ளிட்டோர் படுதீவிரமாக முயற்சித்தனர்.

    தூத்துக்குடி தொகுதி மக்களவை தேர்தல்.. திமுக முன்னிலை.. தமிழிசையை வீழ்த்த போகும் கனிமொழி தூத்துக்குடி தொகுதி மக்களவை தேர்தல்.. திமுக முன்னிலை.. தமிழிசையை வீழ்த்த போகும் கனிமொழி

    டெல்லி மேலிடம் ஆதரவு

    டெல்லி மேலிடம் ஆதரவு

    ஆனால் டெல்லி மேலிடம் தமிழிசையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என விரும்பியது. இத்தனைக்கும் தமிழிசையின் செயல்பாடுகளில் கடும் அதிருப்தியையும் டெல்லி அவ்வப்போது வெளிப்படுத்தியும் வந்தது.

    தமிழிசைக்கு எதிராக சதி

    தமிழிசைக்கு எதிராக சதி

    இந்நிலையில்தான் தமிழிசையை கனிமொழிக்கு எதிராக தூத்துக்குடியில் வேட்பாளராக நிறுத்தலாம் என எதிர்கோஷ்டிகள் டெல்லியிடம் போட்டுக் கொடுத்தது. ஆனால் தமிழிசையின் கணக்கோ திருப்பூர் அல்லது தென்சென்னை தொகுதியாகத்தான் இருந்தது.

    தமிழிசை போட்ட கணக்கு

    தமிழிசை போட்ட கணக்கு

    திருப்பூரில் போட்டியிட்டால் கொங்கு அமைச்சர்கள் உதவியுடன் வென்றுவிடலாம் என்பது ஒரு கணக்கு. தென்சென்னையில் போட்டியிட்டால் பிராமணர்கள் வாக்கு பாஜகவுக்கு கிடைக்கும் என்பது ஒரு கணக்கு. இதனால் தூத்துக்குடி வேண்டவே வேண்டாம் என விடாப்பிடியாக மறுத்தார் தமிழிசை.

    பலிகடாவாக்கவா நான்?

    பலிகடாவாக்கவா நான்?

    மேலும், தூத்துக்குடியில் தம்மை வேட்பாளராக்குவதே ஒரு சதி... என்னை பலிகடவாக்கத்தான் தூத்துக்குடியில் போட்டியிட சொல்லி நெருக்கடி தருகிறார்கள் எனவும் புலம்பினார் தமிழிசை. ஆனாலும் டெல்லி மேலிடம் அவரையே தூத்துக்குடி வேட்பாளராக நிறுத்தியது. அவர் எதிர்பார்த்தது போலவே 'கவுரமான தோல்வியை' நோக்கி தமிழிசை நகர்ந்து கொண்டிருப்பதையே வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

    அவுக ஹேப்பி அண்ணாச்சியாம்!

    English summary
    Tamilnadu BJP President Tamilisai Soundrarajan is facing trial in Thoothukudi Lok Sabha Constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X