தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் விரைவில் வேறு வடிவம் எடுக்கும்.. வைகோ அதிரடி முடிவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறை இல்லாமல் புதிய வடிவம் எடுக்கும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறை இல்லாமல் புதிய வடிவம் எடுக்கும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை குறித்த ஆய்வு அறிக்கையும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருந்தது.

The protest against the Sterlite plant will take a new shape says Vaiko

இந்த நிலையில் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் வைகோ பேசினார்.

அதில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை. ஆலையை நிரந்தரமாக மூடும் வரை புதிய வடிவில் போராட்டம் தொடரும்.

ஆலை அகற்றப்படும் வரை வன்முறை இல்லாமல் போராட்டம் நடக்கும். நாங்கள் வன்முறையில் இறங்க மாட்டோம் என்றார்.

பிப்ரவரி மாதம் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுடன் தேர்தல் வர அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரம் தேர்தல் எப்போது வந்தாலும், 20 தொகுதிகளிலும் யார் போட்டியிடுவது என்று தி.மு.க. தலைமை முடிவு எடுக்கும் எனக் கூறினார்.

English summary
Vaiko said that there will be no violence in the protest against the Sterlite plant
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X