தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த மர்ம நபரின் போன் கால்.. வேகமாக விரைந்த அதிகாரிகள்.. கனிமொழி வீட்டு ரெய்டுக்கு இதுதான் காரணம்!

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் எம்பி கனிமொழி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kanimozhi House Raid: கனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை..கனிமொழி காட்டம்

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் எம்பி கனிமொழி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

    நேற்று தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் எம்பி கனிமொழி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அதேபோல் அவரின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனை தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழக வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு தேர்தல்.. முக்கியமான விஷயங்களை மறந்த தேர்தல் ஆணையம்தமிழக வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு தேர்தல்.. முக்கியமான விஷயங்களை மறந்த தேர்தல் ஆணையம்

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    சத்யபிரதா சாஹு தனது விளக்கத்தில், இது புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஒரு நபரிடம் இருந்து தூத்துக்குடி ஆட்சியருக்கு புகார் வந்தது. மேலு கனிமொழி தங்கியிருந்த இடத்தில் பண புழக்கம் இருப்பதாகவும் பண பட்டுவாடா நடைபெறவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி வந்தது. இது போன்ற புகார்களில் நாங்கள் வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    உடனே

    உடனே

    அதுபோல் இந்த புகாரும் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறைக்கு தகவல்கள் அளிக்கப்பட்டது. இதை வைத்துதான் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

    மோசம்

    மோசம்

    ஆனால் இந்த சோதனையில் எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை. அதேபோல் இந்த சோதனையில் எந்த விதமான பணமும் கைப்பற்றப்படவில்லை. வீடு, அலுவலகம் இரண்டிலும் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்று தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்து இருக்கிறார்.

    யார்

    யார்

    இந்த நிலையில் தற்போது இந்த பொய்யான புகாரை அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது. வெறும் போன் காலை வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் செயல்படுவது தவறு என்றும் திமுக குற்றஞ்சாட்டி இருக்கிறது.

    English summary
    The reason behind the IT raid in DMK MP Kanimozhi House.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X